கைதாவாரா திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி..? நடிகை ராதிகா போலீஸில் பரபரப்பு புகார்…!!

Author: Babu Lakshmanan
16 May 2024, 6:01 pm

திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க கோரி ராதிகா சரத்குமார் சார்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திமுக பேச்சாளர் சிலர் வரம்பு மீறி பேசுவதும், அவதூறு கருத்து பேசி கட்சி மேலிடத்திடம் இருந்து வாங்கி கட்டிக் கொண்ட சம்பவம் அதிகம் அரங்கேறி வருகிறது. அப்படி திமுகவில் உள்ள முக்கிய பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்புவின் ரிப்ளை ஒன்று நெட்டிசன்கள் இடையே கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

மேலும் படிக்க: நேரிலியே ஒன்னும் பண்ண முடியல… இதுல வீடியோ கால் வேறயா..? தமிழக அரசின் தப்பான முடிவு ; இபிஎஸ் கொந்தளிப்பு..!!!

திமுகவில் உறுப்பினராக இருந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மேடை பேச்சுக்களில் ஆபாசமாக பேசுவதை வழக்கமாக கொண்டு இருந்தார். அவர் பேசும் பல கருத்துக்கள் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வந்தன. முக்கியமாக எதிர்க்கட்சிகளில் இருக்கும் தலைவர்கள், அதிலும் பெண் தலைவர்கள் பற்றி மிக கடுமையான கருத்துக்களை, ஆபாசமான கருத்துக்களை இவர் தொடர்ச்சியாக பேசி வந்தார். இதையடுத்து அவர் கட்சியில் இருந்து கடந்த ஆண்டு நீக்கப்பட்டார்.

பின்னர் மக்களவை தேர்தலை முன்னிட்டு வருத்தம் தெரிவித்த அவர், தன்னை கட்சியில் சேர்க்குமாறு கோரிக்கை வைத்தார். இதையடுத்து அவரை மீண்டும் கட்சி மேலிடம் சேர்த்தது.சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். ஆனால் மீண்டும் மீண்டும் அவர் ஆளுநர் ரவி, அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு ஆகியோர் குறித்து இழிவாக பேசியிருந்தார். இதில் அவர் கைதாகி விடுதலையும் செய்யப்பட்டார்.

இந்த சூழலில், பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சமீபத்தில் சரத்குமாரை விமர்சனம் செய்து பேசி இருந்தார். இரவு 2 மணிக்கு மனைவியை எழுப்பி பாஜகவில் இணைய போவதாக சரத் குமார் சமீபத்தில் பேட்டி கொடுத்தார். அதை கொச்சையாக விமர்சனம் செய்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கடுமையான சில வார்த்தைகளை கூறி பேசியது பெரும் சர்ச்சையானது. அவரது பேச்சுக்கு நடிகை ராதிகா சரத்குமார் மற்றும் குஷ்பூ உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க கோரி ராதிகா சரத்குமார் தரப்பில் அவரது மேலாளர் நடேசன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். அந்த புகார் மனுவில், தனது குடும்பம் பற்றியும் தனது கணவர் பற்றியும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மிகவும் இழிவாக பேசியதாகவும் எந்தவொரு காரணமும் இன்று பொதுவெளியில் அவதூறு செய்திகளை மக்களிடையே பரப்பி அதன்மூலம் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி விளம்பரம் தேடுகிறார் என்றும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Varun Dhawan Keerthy Suresh viral video அட்லீ போனை பார்த்து கீர்த்தி சுரேஷ் அதிர்ச்சி…ஒரு டைரக்டர்-க்கு உண்டான மரியாதையே போச்சு…!
  • Views: - 285

    0

    0