நிலத்தகராறில் கட்டப்பஞ்சாயத்து.. அடியாட்களுடன் சென்று மிரட்டிய இயக்குநர் பா.ரஞ்சித்தின் சகோதரர் ; போலீஸில் புகார்…!!
Author: Babu Lakshmanan16 May 2024, 6:55 pm
இயக்குநர் பா.ரஞ்சித்தின் சகோதரர் பிரபு அடியாட்களுடன் சென்று மிரட்டியதாக புகார் எழுந்துள்ளது.
சென்னை அடுத்துள்ள மணலி புதுநகரைச் சேர்ந்த ரிஷி என்பவர் 2019ல் இடம் ஒன்று வாங்கியதாகவும், அதே பகுதியைச் சேர்ந்த ஷகிலா என்பவர் அதே இடத்தை உரிமைக் கொண்டாடியதாகவும், இது தொடர்பான வழக்கு பத்திரப்பதிவு அலவலகத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில், ஷகிலா இயக்குநர் பா.ரஞ்சித்தின் சகோதரர் பிரபுவை தொடர்பு கொண்டு முறையிட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க: உதயநிதிக்கு என்ன யோக்கிதை இருக்கு..? திமுக அரசை கையை நீட்டி கோபத்தோடு கேள்வி கேட்கும் மக்கள் ; ஆர்பி உதயகுமார்
அதன்பேரில், பா.ரஞ்சித்தின் சகோதரர் பிரபு, வழக்கறிஞர்கள் எனக் கூறப்படும் 10க்கும் மேற்பட்ட அடியாட்களுடன் சென்று, ரிஷியின் தனியார் நிறுவனத்தில் அத்துமீறி நுழைய முயற்சித்ததாகவும், முகத்தில் துணியைக் கட்டியபடி, அங்கு பொறுத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை அடித்து சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக ரிஷி மணலி புதுநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
2007ம் ஆண்டு உரிமையாளரான திருவெற்றியூரைச் சேர்ந்த ரவீந்திரன், ரேவதி உள்ளிட்டோரிடம் இருந்து இந்த இடத்தை முறைப்படி வாங்கியதாகவும், ஆனால், இவர்களின் உறவினர் எனக் கூறப்படும் ஷகிலா இடத்தை உரிமை கோரி மோதலில் ஈடுபட்டு வருவதாகவும் பாதிக்கப்பட்ட ரிஷி தெரிவித்துள்ளார்.