‘நாங்க யாரு தெரியுமா..? எங்ககிட்டயே டிக்கெட்டா..?’… கஞ்சா போதையில் கண்டக்டரை தாக்கிய 3 இளைஞர்கள் கைது!!

Author: Babu Lakshmanan
17 May 2024, 9:31 am

திருவள்ளூர் அருகே கஞ்சா போதையில் அரசு பேருந்தில் டிக்கெட் கேட்ட கண்டக்டரை தாக்கிய 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து அரக்கோணத்திற்கு சென்று கொண்டிருந்த தடம் எண் 44 அரசு பேருந்தில் ஏறிய மூன்று இளைஞர்களிடம் கண்டக்டர் ஐயப்பன் (42) டிக்கெட் எடுக்குமாறு கேட்டுள்ளார். அப்போது, கஞ்சா போதையில் இருந்த அந்த மூன்று இளைஞர்களும் எங்களிடமே டிக்கெட் கேட்கிறாயா?, நாங்கள் யார் தெரியுமா என்று கேட்டு அந்த மூன்று இளைஞர்களும் கண்டக்டரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

மேலும் படிக்க: கோவையில் போதை மாத்திரை விற்பனை கும்பல் கைது… தடை செய்யப்பட்ட மெத்தபட்டோமின், மருந்து குப்பிகள் பறிமுதல்

இதில் பலத்த காயம் அடைந்த கண்டக்டர் ஐயப்பன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், பேருந்தில் தாக்கியவர்கள் குறித்து மப்பேடு போலீசில் புகார் கொடுத்தார்.

புகாரின் பேரில் பேரம்பாக்கம் புதிய காலனியை சேர்ந்த அய்யனார் மகன் ராகேஷ்(21), இருளஞ்சேரி கிராமம், அம்பேத்கர் நகரை சேர்ந்த பாரத் மகன் முகேஷ் (20), அரக்கோணம் தாலுக்கா பழைய கேசாவரம் பகுதியை சேர்ந்த செந்தில்ராஜ் மகன் குணால் (19) ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.

மேலும், கைது செய்யப்பட்ட அவர்களிடமிருந்து இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து 3 பேரையும்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 258

    0

    0