அந்த ஹீரோயினும் GV-யும் ஓவர் நெருக்கம்.. எனக்கு இப்படி தான் இருந்துச்சு.. சைந்தவி OpenTalk..!

Author: Vignesh
17 May 2024, 2:19 pm

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்துகொண்டிருப்பவர் ஜி.வி.பிரகாஷ். இவர், நல்ல திரைப்படங்களை தேர்ந்தெடுத்து, அதில் தனது முழு திறமையை காட்டி நல்ல இசையை தொடர்ந்து கொடுத்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ்குமார்.

இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயில், செல்பி, ஐயங்காரன் ஆகிய படங்களில் ஜிவி.பிரகாஷின் நடிப்பு நன்றாக இருந்தாலும், எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனிடையே, ஜி.வி.பிரகாஷ் சிறுவயதில் இருந்தே இசையின் மீது ஆர்வம் கொண்ட ஜென்டில்மேன் படத்தில் இடம்பெற்ற சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே பாடலை முதன்முதலாக பாடினார் அசத்தியது குறிப்பிடத்தக்கது.

g v prakash -updatenews360

மேலும் படிக்க: யாரையும் நம்பிறாதீங்க.. மருத்துவமனையில் இருந்து திடீர் வீடியோ வெளியிட்ட மதுரை முத்து மனைவி..!

மேலும், கடந்த 2006ம் ஆண்டு வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான வெயில் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக கலக்கிய ஜி.வி.பிரகாஷ் விஜய், அஜித், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்தார்.

ஜி.வி.பிரகாஷ் இசையில் ஆதிக்கம் செலுத்தி வருடிகிறார். இவருக்கு படிப்படியாக நடிப்பின் மீது ஆர்வம் வந்த நிலையில், படங்களிலும் தொடர்ந்து நடித்து வந்தார், இன்னொரு பக்கம் இசையமைத்தும் வரும் இவர், கடந்த 2013ம் ஆண்டு பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

மேலும் படிக்க: தம்பி ஓடாத நில்லு.. மகன்களுடன் கொஞ்சி விளையாடிய நயன்..!(Video)

இந்நிலையில், இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் திருமணம் செய்துகொண்டு 11 ஆண்டுகள் ஆகும் நிலையில், தற்போது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருக்கின்றனர். அவர்கள் பிரிவதாக செய்தி பரவி வந்தது. தற்போது, அதிகாரபூர்வமாக ஜி.வி.பிரகாஷ் சைந்தவி இருவரும் விவாகரத்தை அறிவித்து இருக்கிறார்கள்.

saindhavi

இந்நிலையில், சைந்தவி கெடுத்த பழைய பேட்டி ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ஜிவி பிரகாஷ் படத்தில் இவ்வளவு நெருக்கமாக இருக்கிறார். அதை பார்க்கும் பொழுது உங்களுடைய மனநிலை என்ன என்று தொகுப்பாளர் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதில், அளித்த சைந்தவி, ஜீவி பிரகாஷ் சினிமாவில் நடிக்க போறேன் என்று சொன்னதுமே நிறைய கண்டிஷன் போட்டேன். ஆனால், அவர் அதை எதையுமே பின்பற்றவில்லை டார்லிங் படத்தில் நெருக்கமாக நடித்திருந்தார். எனக்கு அதை பார்க்கும் பொழுது மிகவும் கஷ்டமாக இருந்தது. ஆனால், படத்தைப் பார்த்து நிறைய பேர் சந்தோஷம் அடைந்தார்கள். எல்லோருக்கும் கல்யாணம் ஆகி உள்ளது. மனைவியும் இருப்பார்கள் குடும்பமும் இருக்கிறது. அவர்கள் வீட்டில் இருப்பவர்களும் பார்ப்பார்கள். அவர்களுக்கும் இப்படித்தான் இருக்கும் போல என்று நினைத்தேன். இப்போ எல்லாமே பழகிவிட்டது என்ற சைந்தவி கூறியிருந்தார்.

  • Allu Arjun press meet emotional statement நானும் ஒரு குழந்தைக்கு அப்பா தான்..கண்ணீரோடு பேட்டியளித்த அல்லு அர்ஜுன்..!
  • Views: - 289

    0

    0