செல்வப்பெருந்கைக்கு ஜால்ரா அடிக்க வேண்டிய அவசியம் கிடையாது ; காங்., எம்எல்ஏ EVKS இளங்கோவன் திடீர் ஆவேசம்..!!

Author: Babu Lakshmanan
17 May 2024, 1:11 pm

திமுக ஆட்சியில் சிறு தவறுகள் இருக்கலாம், அதை திருத்தி கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் எம்எல்ஏ EVKS இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக செல்வப்பெருந்தகை பொறுப்பு ஏற்றதை தொடர்ந்து மாவட்டம் தோறும் கட்சியை வலுப்படுத்தும் வகையில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இதனை தொடர்ந்து ஈரோடு பேருந்து நிலையம் அருகில் உள்ள காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் வடக்கு தெற்கு மாநகர மற்றும் வட்டார காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மேலும் படிக்க: நீங்க பெண்களின் காவலரா..? எதிர்க்கட்சி தலைவராக அல்ல… ஒரு தந்தையாக கடுமையாக கண்டிக்கிறேன் ; திமுக மீது இபிஎஸ் ஆவேசம்!!

இதில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் பங்கேற்றனர். இதையடுத்து, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மத்தியில் மூத்த காங்கிரஸ் கட்சி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசியதாவது :- பொய் பேசுவதை தொழிலாக கொண்டுள்ள மோடியை வீட்டுக்கு அனுப்பவில்லை என்றால், நாடு எவ்வளவு மோசமான நிலைக்கு செல்லும் என்று சிந்தித்து பார்க்க வேண்டும்.

மோடியின் முகம் நாளுக்கு நாள் மாறி வருகிறது. உள்ளத்தை தவிர அவர் முகம் தலை எல்லாம் வெள்ளையாக உள்ளது. வெறிபிடித்த நாயை விரட்ட வேண்டிய தானே காங்கிரஸ் கட்சியின் வேலை. நாட்டுக்கு மிகப்பெரிய கேடு, நாட்டுக்கு பாடுபட்டு வாங்கிய சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும்.

யார் நல்லாட்சி தந்தாலும் காமராஜர் ஆட்சி தான். அந்த வகையில் ஸ்டாலின் நல்லபடியாக ஆட்சி செய்து வருகிறார். ஆட்சிக்கு திராவிட ஆட்சி காமராஜர் ஆட்சி, கக்கன் ஆட்சி என்றெல்லாம் பெயர் வைக்கலாம். சிறு தவறுகள் இருக்கலாம், அதை திருத்தி கொள்ள வேண்டும். சீமான், இபிஎஸ், அண்ணாமலை போன்றவர்கள் ஆட்சி பொறுப்பில் வந்தால் நமது குழந்தைகள் நிலைமை என்னவாகும் என்று சிந்திக்க வேண்டும்.

மோடியின் ஆட்சியில் வெள்ள நிவாரணம், புயல் நிவாரணம் வழங்கவில்லை. ஆயிரக்கணக்கான கோடி கேட்ட நிலையில், 250 கோடி ரூபாய் மட்டுமே கொடுத்து இருக்கிறார்கள்.400 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று சொல்லி வந்த பாஜக, தற்போது எண்ணிக்கை சொல்வதில்லை. இந்து மதத்தினை நிலைநிறுத்த வெறிபிடித்து பாஜகவினர் செயல்படுகின்றனர். ஸ்டாலின், ராகுல்காந்தி பிரதமராக வரவேண்டும் என 5 வருடங்களுக்கு முன்பு சொன்னதை தற்போது வடநாட்டில் சொல்கிறார்கள்.

செல்வப்பெருந்தகைக்கு ஜால்ரா அடிக்க வேண்டிய அவசியம் கிடையாது. அடைய வேண்டிய பதவியை எல்லாம் நான் அடைந்து உள்ளேன், என பேசினார்.

இதனை தொடர்ந்து பேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை, செல்லும் இடங்களில் எல்லாம் காங்கிரஸ் நிர்வாகிகள் ஒரு குரல் கேட்க முடிகிறது. வட்டார தலைவர்கள் சந்தோஷமாக இல்லை என்று சொல்கிறார்கள். காரணம் தோழமை கட்சிகள் மதிப்பு இல்லை, கேட்டால் பூத் கமிட்டி இல்லை. பலஆண்டுகள் கடந்த ஒரே கட்சி காங்கிரஸ் கட்சி.

சீமான், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் நாங்கள் தான் முதல்வர் என்று சொல்கிறார்கள் என்பது போல, காங்கிரஸ் கட்சிக்கு காமராஜர் ஆட்சி கொண்டு வர வேண்டும் என்ற ஆசை உள்ளது. வெறுப்பு அரசியலை எந்த காலத்திலும் காங்கிரஸ் கட்சி பேசியது இல்லை. கடந்த ஆட்சி காலத்தில் காங்கிரஸ் கட்சி சட்டமன்றத் தேர்தலில் 112 தொகுதிகள் பெற்ற நிலையில், படிப்படியாக தொகுதிகள் பெறுவது சரிந்து கடந்த தேர்தலில் 29 தொகுதிகளை பெற்றோம். இதற்கு கட்சி உட்கட்டமைப்பு பலப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

பாஜக நாட்டை துண்டாடும் நினைக்கும் நிலையில், அமித்ஷா சொல்கிறார் தமிழகத்தில் கணக்கை தொடங்க இருப்பதாக சொல்கிறார். ஆனால் அதற்கு வாய்ப்பில்லை, என பேசினார்.

இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதாவது :- மோடி மிகப்பெரிய தோல்வியை தழுவ போகிறார் என்று உளவுத்துறை அறிக்கை கொடுத்துள்ளது. அந்த அடிப்படையில் எப்படியாவது குட்டிகரனம் அடித்தாவது பிரதமராகிவிடும் வேண்டும். மக்கள் தன்னிடம் இருந்த அதிகாரத்தை பறித்து விடுவார்கள். என்ற எண்ணத்தில் ஆர்எஸ்எஸ் சித்தாந்தம், பாஜக கொள்கை எல்லாவற்றையும், உண்மைக்கு புறம்பாக இஸ்லாமியர்களுக்கு எதிராக எப்போது பேசினேன் என்று அவருக்கு அவரே கேட்டு கொள்கிறார்.

இஸ்லாமியர்கள், இந்துக்கள், கிறிஸ்துவர்கள், பெளத்தர்கள், சீக்கியர்கள் போன்ற யாரும் எந்த தேசத்தில் நம்புவதற்கு யாரும் இல்லை. கடந்த 10 ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி ஆட்சி செய்து கொண்டு இருக்கிறார். ஆண்டுக்கு 2கோடி பேருக்கு வேலைவாய்ப்பு, வங்கி கணக்கில் 15 லட்சம் ரூபாய் போடுவது, சிலிண்டர் விலை, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு போன்ற வாக்குறுதியை எதையும் அவரால் நிறைவேற்ற முடியவில்லை. இதனால், மோடி ஆட்சி மக்கள் நம்பிக்கை இழந்து காலாவதியான ஆட்சியாக உள்ளது.

ஒரு தேசம், ஒரு காவிக்கொடி, ஒரு மொழி ஒரு தேர்தல் ஒரு உணவு பழக்க வழக்கம் என்று சில மாதங்களுக்கு முன்பு சொன்ன நிலையில், இப்போது என்ன இவ்வளவு பெரிய மாற்றம். மாற்றத்திற்கு காரணம் இந்திய மக்கள் நிராகரித்து விட்டார்கள் என்று தான் மாற்றம். பிரியங்கா காந்தி, ராகுல்காந்தி பிரச்சாரம் பாரத்து, பாஜக ஆர்எஸ்எஸ் உறைந்து போய் உள்ளது. இதனால், பாஜக தோல்வி அடைவது உறுதி.

திமுக கூட்டணியில் இருந்த போதும் காமராஜர் ஆட்சி பற்றி பேசுவதில் எந்த சங்கடம் கிடையாது. யார் நல்லாட்சி கொடுக்கிறார்களோ அது காமராஜர் ஆட்சி தான். திமுகவுக்கு திராவிட மாடல் ஆட்சி, கம்யூனிஸ்ட் கட்சிக்கு லெனின் ஆட்சி போன்ற கட்சிகளுக்கு ஒரு நிலைப்பாடு இருப்பது போன்று காங்கிரஸ் கட்சிக்கு காமராஜர் ஆட்சி என்று சொல்வதில் உரிமை உள்ளது.
திமுக ஆட்சியில் சொத்து வரி, வேலை நேரம் அதிகரிப்பு, விலைவாசி உயர்வு போன்றவற்றை காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்தோம், எதிர்த்தோம்.

சவுக்கு சங்கர் விவகாரத்தில் பெண்களுக்கு எதிராக பேசும் போது காங்கிரஸ் கட்சி ஒருபோதும் ஆதரிக்காது. அதை எதிர்க்கிறோம், சவுக்கு சங்கருக்கு பெண்களை பற்றி தவறாக பேசியதற்கு நீதிமன்றம் தண்டனை கொடுத்த நிலையில், மீண்டும் தவறாக பேசுவது சரியா..? சட்டம் தன் கடமை செய்து கொண்டுள்ள நிலையில் மனித உரிமை மீறக்கூடாது. 2026ம் ஆண்டு இதே கூட்டணி இருப்பது குறித்து காலங்கள், தலைமை தான் முடிவு செய்யும்.

2004ம் ஆண்டு தேர்தலில் 74 ஆயிரம் கோடி விவசாயிகள் கடன் தள்ளுபடி வாக்குறுதி என்று சொன்ன நிலையில், காங்கிரஸ் தள்ளுபடி செய்தது. அதே போன்று காங்கிரஸ் கட்சி எந்த வாக்குறுதி கொடுத்தாலும் நிறைவேற்றும் கட்சியாக காங்கிரஸ் கட்சி உள்ளது ஆனால் மோடி போன்று வாய்க்கு வந்தப்படி பேசவில்லை. சிஏஏ சட்டம் மக்களுக்கு எதிரான அரசியல் இந்த தேசத்தினை பிளவுப் படுத்த மதவாத அரசியலை மோடி செய்து வருகிறார்.

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பற்றி பாடப்புத்தகங்களில் வருவது தவறு இல்லை. கலைஞர் மிகப்பெரிய சாதனையாளர். தமிழக மக்களுக்கு நிறைய சிறப்புகளை செய்துள்ளார். அவரை பற்றி பாட புத்தகங்களில் இடம் பெறுவது தவறில்லை. அவர் 5 முறை முதல்வராக இருந்த போது நிறைய திட்டத்தினை கொடுத்து உள்ள நிலையில், இந்த கால தலைமுறையினர் தெரிந்து கொள்வதில் தவறில்லை.

தமிழகத்தின் டெல்டா விவசாயிகள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி போராடும் ஒருபோதும் விட்டு கொடுக்காது. தமிழகத்தின் உரிமைக்காக போராடும் தேவைப்பட்டால் கர்நாடக காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக தமிழக மக்களை திரட்டி போராடுவோம், எனக் கூறினார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 281

    0

    0