ஆம் ஆத்மியை கட்சியை முடக்க முடிவு? முதன்முறையாக குற்றப்பத்திரிகையில் கெஜ்ரிவால் பெயர்!!

Author: Udayachandran RadhaKrishnan
17 May 2024, 7:46 pm

ஆம் ஆத்மியை கட்சியை முடக்க முடிவு? முதன்முறையாக குற்றப்பத்திரிகையில் கெஜ்ரிவால் பெயர்!!

டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி மாநில முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்த நிலையில், திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

தற்போது அவர் இடைக்கால ஜாமின் பெற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் இன்று ரோஸ் அவென்யூவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை துணை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

இதில் தேசிய அரசியல் கட்சியான ஆம் ஆத்மி கட்சியை குற்றம்சாட்டப்பட்டவராக அமலாக்கத்துறை இணைத்துள்ளது. அதேபோல் குற்றப்பத்திரிகையில் அரவிந்த் கெஜ்ரிவால் பெயரையும் இணைத்துள்ளது. டெல்லி மாநில மதுபானக் கொள்கை வழக்கில் பணமோசடி என்ற கோணத்தில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

இதுவரை அமலாக்கத்துறை எட்டு முறை இந்த வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. ஆனால் தற்போது முதன்முறையாக அரவிந்த கெஜ்ரிவால் பெயர் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளது.

மேலும் படிக்க: மதுபோதையில் ஓட்டலை சூறையாடிய கும்பல் : சாப்பிட வந்த 5 பேர் வெறிச்செயல்.. அதிர்ச்சி வீடியோ!

குற்றம்சாட்டப்பட்டவராக ஆம் ஆத்மி கட்சியை பெயரை இணைத்துள்ளதால் அந்த கட்சிக்கு பாதிப்பு ஏற்படும் என தகவல் தெரிவிக்கின்றன. ஆம் ஆத்மி கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுத முடியும். கட்சியின் சொத்துகளை முடக்க முடியும்.

டெல்லியில் உள்ள தலைமைக் கழகம் உள்ளிட்ட சொத்துகளை முடக்க முடியும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

  • Maharaja release in china சீனாவில் மகாராஜா…. ரூ.700 கோடி சாத்தியமா? கொண்டாடும் ரசிகர்கள்!
  • Views: - 312

    0

    0