அண்டா அண்டாவாக கொட்டி கிடந்த கறி.. ஆண்கள் மட்டும் பங்கேற்கும் விநோத அசைவ திருவிழா : வைரல் வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
18 May 2024, 2:18 pm

அண்டா அண்டாவாக கொட்டி கிடந்த கறி.. ஆண்கள் மட்டும் பங்கேற்கும் விநோத அசைவ திருவிழா : வைரல் வீடியோ!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள சொரிக்காம்பட்டி பெருமாள்கோவில்பட்டி கிராமத்தில் உள்ள கரும்பாறை முத்தையா கோவில் விழா இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றுவருகின்றது.

இவ்விழாவில் பாரம்பரிய முறைப்படி ஆண் பக்தர்கள் மட்டுமே பங்கேற்று வருகின்றனர். இந்த விழாவில் பலியிடப்படுவதற்காக ஆடுகள் கோவிலிலேயே வளர்க்கப்படுகின்றன. இந்த ஆடுகள் மேய்ச்சலுக்காக வயல் மற்றும் விளைநிலங்களில் உணவை தேடி செல்லும்போது முத்தையா சாமியே வந்து தங்களது வயலில் இரை தேடுவதாக நம்பிக்கை வைத்து அந்த ஆடுகளை விரட்டமாட்டார்கள்.

இந்த ஆண்டு கரும்பாறை முத்தையா கோவில் திருவிழா இன்று காலை தொடங்கிய நிலையில் கோவிலில் சாமிக்கு பொங்கல் வைத்து வழிபாட்டை தொடங்கிய பின்னர், நேர்த்திக்கடனாக செலுத்தப்பட்ட 90 கிடாக்களும், 2000 கிலோ அரிசி மூலம் தயார் செய்யப்பட்ட அசைவ உணவு வழங்கப்பட்டது

இந்த கறி விருந்தில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களுக்கு விருந்து வழங்கப்பட்டது. இந்த விருந்தானது வாழை இலையில் சாதமும் ஆட்டுகறி குழம்பும் ஆண்களுக்கு பரிமாறப்பட்டது.

இதனை சாப்பிட்ட பிறகு இலையை எடுக்காமல் அப்படியே விட்டுச் செல்வது வழக்கம். ஒரு வாரத்திற்கு பின்பு இலைகள் காய்ந்த பிறகே பெண்கள் கோவிலின் தரிசனத்திற்கு வருவார்கள்

இந்த கறிவிருந்தில் திருமங்கலம், சொரிக்கம்பட்டி பெருமாள்கோவில்பட்டி குன்னம்பட்டி, கரடிக்கல், மாவிலிபட்டி, செக்கானூரணி, சோழவந்தான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான ஆண் பக்தர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க: அப்பவே சொன்னேன்..2 மாதங்களுக்கு எதுவுமே செய்ய முடியாது : திமுக அரசு அலட்சியத்தால் உயிர் பலி : அன்புமணி ஆவேசம்!

இந்த விழாவானது சமூக நல்லிணக்கத்திற்காக நடத்தப்படுகிறது. குழந்தை வரம், வேலைவாய்ப்பு, உடல் ஆரோக்கியத்திற்காக நேர்த்திக்கடனுக்காக ஆடுகளை கோவிலுக்கு செலுத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  • what is the problem on sikandar salman khan asks people படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!