நமக்கு எதுக்கு வம்புனு ஒதுங்கிய உச்ச நடிகர்கள் – மோடியின் Biopic’ல் ஹீரோவாக நடிக்கும் தமிழ் நடிகர்..!

Author: Vignesh
18 May 2024, 3:52 pm

80களின் காலகட்டத்தில் இருந்து இன்றுவரை தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஒரு தவிர்க்க முடியாத நடிகராக சத்யராஜ் இருந்து வருகிறார். முதலில் தயாரிப்பு உள்ளிட்ட பணிகளை செய்து வந்த சத்யராஜ் அதன் பிறகு தான் நடிகராக மாறினார். இவரின் பள்ளிக்கால நண்பரான மணிவண்ணனுடன் சத்யராஜு இணைந்து பல படங்களில் நடித்து அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அது மட்டுமல்லாமல் மணிவண்ணன் இயக்கிய பெரும் படங்களில் சத்யராஜ் நடித்து, இவர்களில் காம்பினேஷனில் நிறைய படங்கள் வெற்றியை கண்டுள்ளது.

sathyaraj -updatenews360

மேலும் படிக்க: GOAT படத்தின் VFX வேலை ஓவராம்.. முக்கிய காட்சியின் புகைப்படத்தை வெளியிட்ட வெங்கட் பிரபு..!

கதாநாயகன் வில்லன் குணசித்திர கதாபாத்திரம் உள்ளிட்ட கதாபாத்திரங்களில் சத்யராஜ் நடித்திருக்கிறார். இவர் எம்ஜிஆரின் தீவிர ரசிகர் பெரியாரின் தீவிர வெறியன் ஆகவும் இருந்திருக்கிறார். மேலும் தந்தை பெரியாராக நடித்த திரைப்படத்தில் ஊதியம் வாங்காமல் சத்யராஜ் அந்த படத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. சத்யராஜ் உடைய சினிமா கேரியரில் நூறாவது நாள், ஜல்லிக்கட்டு, ரிக்ஷா மாமா, வில்லாதி வில்லன், வால்டர் வெற்றிவேல், அமைதிப்படை போன்ற படங்கள் இவரது நடிப்பிற்கு எடுத்துக்காட்டு என்று சொல்லலாம். இப்படி திரைத்துறையில் மதிப்புமிக்க ஒரு நடிகராக இருப்பவர் சத்யராஜ்.

மேலும் படிக்க: உனக்கென்னமா நீ மனநோயாளி.. சுசித்ராவுக்கு பயில்வான் ரங்கநாதன் பதிலடி..!

இந்நிலையில், பாலிவுட் முதல் கோலிவுட் வரை புகழ்பெற்ற பிரபலங்களின் பயோபிக் திரைப்படங்கள் உருவாகி வருவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில், பயோபிக் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும், உண்மை சம்பவத்தை கொண்டு திரைப்படம் எடுப்பது மிகவும் சவாலான விஷயம்தான். பிலிம் மேக்கர்கள் பலரும் அதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு பயோபிக் திரைப்படம் எடுக்கப்பட உள்ளதாம். இதில், மோடியின் கதாபாத்திரத்தில் பிரபல நடிகர்களை நடிக்க அணுகிய போது நிறைய பேர் எதற்கு வம்பு என்று ஒதுங்கி விட்டார்களாம். ஆனால், நடிகர் சத்யராஜ் நடிக்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • red card issued to serial actress raveena daha இனி ஒரு வருஷத்துக்கு நடிக்க கூடாது- பிரபல சீரீயல் நடிகைக்கு ரெட் கார்டு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…