தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. 22ஆம் தேதி வரை கனமழை : வானிலை மையம் WARNING!

Author: Udayachandran RadhaKrishnan
18 May 2024, 5:52 pm

தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. 22ஆம் தேதி வரை கனமழை : வானிலை மையம் WARNING!

தென்மேற்கு வங்கக்கடலில் வரும் 22ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து அது வடகிழக்கு திசையில் நகர்ந்த 24ம் தேதி வாக்கில் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நாளை மற்றும் நாளை மறுநாள் அதி கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 18, 21, 22 ஆகிய 3 தேதிகளில் மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. தமிழ்நாட்டிற்கான மழை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் செந்தாமரை கண்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

அதில், தருமபுரி, சேலம், நாமக்கல் ஆகிய தென் மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. நெல்லை, தென்காசி, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க: அரசு மருத்துவப் பணியாளர்கள் இனி ஷிப்ட் அடிப்படையில் பணி : வெளியானது அரசாணை!

நாளை முதல் 21ம் தேதி வரை தேனி, தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது.

கேரள, கர்நாடக கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை, புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்று கூறினார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 421

    0

    0