நடுவானில் விமானத்தில் திடீர் கோளாறு.. அலறிய 167 பயணிகள் : அவசரமாக தரையிறக்கம்!!

Author: Udayachandran RadhaKrishnan
18 May 2024, 6:34 pm

நடுவானில் விமானத்தில் திடீர் கோளாறு.. அலறிய 167 பயணிகள் : அவசரமாக தரையிறக்கம்!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு 167 பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கிளம்பியது.

விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. இதனையறிந்த விமானி அவசரமாக திருச்சி விமான நிலையத்தில் தரையிறக்கினார்.

மேலும் படிக்க: கனமழைக்கு சரிந்து விழுந்த மேற்கூரை.. கோவை ஆட்சியர் அலுவலகத்தில் விபத்து.. பரபரப்பு!

விமானத்தில் பயணிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். விமானத்தில் ஏற்பட்ட பழுதை சரி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ