முதலிடத்தில் இந்தியா.. காரணம் பிரதமர் மோடி ; திமுக அமைச்சர் இப்படி சொல்லிட்டாரே..!!
Author: Udayachandran RadhaKrishnan19 May 2024, 11:47 am
முதலிடத்தில் இந்தியா.. காரணம் பிரதமர் மோடி ; திமுக அமைச்சர் இப்படி சொல்லிட்டாரே..!!
பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: பொய் செய்திகளை பரப்புவதில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. இந்த சாதனையை உருவாக்கியவர் பிரதமர் மோடி.
மோடியின் சமீபகால பொய்கள் என்னென் என்பதை பட்டியல் போட்டுள்ளதாவது, 15% நாட்டின் வளத்தை முஸ்லிம்களுக்கு கொடுக்க காங்கிரஸ் விரும்புகிறது.
ஒடுக்கப்பட்ட மக்களின் காவலன் இந்த மோடி. அந்த மக்களின் உரிமைகளை பறிக்க விடமாட்டேன்.
இந்து – முஸ்லிம் என நான் அரசியல் செய்வதில்லை. அப்படி அரசியல் செய்தால், நான் பொதுவாழ்வில் இருக்கவே தகுதியில்லாதவன்.
காங்கிரஸ் கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்றால் அயோத்தி ராமர் ஆலயம் இல்லாமல் போய்விடும். ராமர் மீண்டும் கூடாரத்திற்கு சென்றுவிடுவார்.
மேலும் படிக்க: மீண்டும் அதிமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ்? ரகசிய பேச்சு குறித்து உண்மையை உடைத்த ஆர்பி உதயகுமார்!
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோவிலுக்குள் புல்டோசர் செல்லும்.
குடியுரிமை அற்றவர்கள் வாக்கு வங்கிக்குள் வராததால் அவர்களைப் பற்றி காங்கிரசுக்கு கவலையில்லை.
தேர்தலில் வெற்றி பெறுவதற்காக சில கட்சிகள் மகளிருக்கு இலவச பேருந்து பயணம் வழங்குகிறார்கள். இதனால், மெட்ரோ ரயில்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 50% குறைந்துவிடுகிறது.
நாட்டில் வாக்கு ஜிஹாத் தொடருமா? அல்லது ராமராஜ்யம் தொடருமா என்பதை முடிவு செய்யுங்கள்.
காங்கிரஸ் கட்சிக்கு பாகிஸ்தான் மீது அன்பும், நமது ராணுவத்தின் மீது வெறுப்பும் ஏற்பட்டுள்ளது.
தோல் நிறத்தை வைத்தே குடியரசுத் தலைவர் தேர்தலில் திரௌபதி முர்முவை காங்கிரஸ் தோற்கடிக்க முனைந்தது.
தேர்தல் அறிவித்ததில் இருந்து அதானி, அம்பானி குறித்து விமர்சிப்பதை காங்கிரஸ் நிறுத்திவிட்டது. அதானி, அம்பானி குறித்து பேசாமல் இருக்க காங்கிரஸ் அவர்களிடம் எவ்வளவு கறுப்புப் பணத்தை பெற்றது என்ற பொய்யான செய்தியை பரப்பியுள்ளார் மோடி.
காங்கிரஸ் கட்சி, பாபர் மசூதி பூட்டை ராமர் கோயிலுக்குப் போட்டுவிடும் .
இந்து மதத்தின் நம்பிக்கையை முடிவுக்கு கொண்டு வர காங்கிரஸ் சதி திட்டம் தீட்டி வருகிறது.
நான் உயிருடன் இருக்கும் வரை இந்த நாட்டை மதத்தின் அடிப்படையில் பிரிக்க விடமாட்டேன்.
நமது ராணுவத்தையும், ராணுவ வீரர்களையும் காட்டிக் கொடுத்த வரலாறு காங்கிரஸுக்கு உண்டு. ஓட்டுக்காக இத்தனை பொய்கள் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.