‘எங்கள கருணைக்கொலை பண்ணிடுங்க’…. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வயது முதிர்ந்த தம்பதி தர்ணா!!

Author: Babu Lakshmanan
20 மே 2024, 5:04 மணி
Quick Share

திண்டுக்கல் ; ஒன்பது மாதங்களுக்கு முன்பு மனு கொடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தங்களை கருணை கொலை செய்து விடக் கூறி கணவன் மனைவி முதியவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை குள்ள குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட கட்டணம் பட்டியை சேர்ந்தவர் 77 வயதான மகாமுனி. இவரது மனைவி 70 வயது சிட்டு வள்ளி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகனுக்கு தானமாக 33 சென்ட் இளைய மகன் துரைசாமி. தனது தாய், தந்தை இருவரையும் பராமரித்துக் கொள்வதாக கூறியதால், தனது தாய், தந்தை பெயரில் இருந்த சுமார் 73 சென்ட் விவசாய நிலத்தை இளைய மகனுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு எழுதி கொடுத்துள்ளனர்.

நிலம் எழுதி வைத்த பிறகு, தனது தாய், தந்தையை தாக்குவதும், ஆபாசமாக பேசியதுடன் வீட்டை விட்டும் துரைச்சாமி மற்றும் அவரது மனைவியும் சேர்ந்து துரத்தியும் உள்ளனர். இதனால், கணவன், மனைவி இருவரும் அருகில் உள்ள விவசாய நிலங்களில் தற்போது வரை தினக்கூலி வேலைக்கு சென்று வருகின்றனர்.

இது தொடர்பாக அவர்கள் கூறும் பொழுது : கடந்த 2021ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் தனது இரு மகன்களுக்கும் தானமாக எனது விவசாய நிலத்தை எழுதி வைத்தேன். இதில் எனது இளைய மகன் துரைசாமிக்கு 73 செண்ட்டும், மூத்த மகன் ராஜாவுக்கு 33 செண்டும் எழுதி வைத்தேன். இளைய மகன் தன்னை பார்த்துக் கொள்வதாக கூறியதால் அதிகளவு நிலத்தை எழுதி வைத்தேன். ஆனால் அவர் எங்களை கவனிக்கவில்லை.

மேலும் படிக்க: சவுக்கு சங்கருக்கு 2 நாள்… யூடியூபர் ஃபெலிக்ஸுக்கு ஒரு நாள் ; நீதிமன்றம் போட்ட அடுத்தடுத்த அதிரடி உத்தரவு…!!

தானமாக வழங்கிய நிலத்தை மீண்டும் எங்களுக்கு மாவட்ட ஆட்சியர் கடந்த 2021 ஆம் ஆண்டு மனு கொடுத்தோம். DRO,RDO என அனைவரும் விசாரணை செய்து நிலத்தை ரத்து செய்து தருகிறோம் என நான்கு வருடமாக கூறி, தற்போது வரை ரத்து செய்யவில்லை. தற்போது, வரை நாங்கள் கூலி வேலைக்கு சென்று சாப்பிட்டு வருகிறோம். எங்களது வயதும் அதிகமாக உள்ளதால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகிறது.

எங்களை கவனிப்பதற்கு ஆள் இல்லை. ஆகவே, எங்களை கருணை கொலை செய்வதற்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி தர வேண்டும் என்று கூறி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கணவன் மனைவி இருவரும் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

  • ரூ.411 கோடி அரசு நிலம் அபேஸ்? அறப்போர் இயக்கம் கைகாட்டும் அமைச்சர்!
  • Views: - 215

    0

    0