கடைக்குள் புகுந்து அத்துமீறல்… வியாபாரியின் தலையில் அரிவாளால் வெட்டிய கும்பல் ; அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!
Author: Babu Lakshmanan21 May 2024, 8:19 am
தூத்துக்குடி வஉசி மார்க்கெட்டில் வியாபாரியிடம் தகராறு செய்த கும்பல், வியாபாரியை அரிவாளால் வெட்டிய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி வஉசி மார்க்கெட்டில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை கடை வைத்திருப்பவர் தூத்துக்குடி சண்முகபுரத்தைச் சேர்ந்தவர் திசை கரைராஜா. நேற்று இரவு இவரது கடை அருகே உள்ள கார்த்திக் ராஜா என்பவர் கடைக்கு திணை வாங்குவதற்காக 6 பேர் கொண்ட கும்பல் வந்துள்ளது. அப்போது, அந்த கடையில் உரிமையாளர் இல்லாத நிலையில், அந்த கும்பல் கடை உள்ளே சென்று திணையை எடுத்துள்ளது.
இதைப் பார்த்த திசைகரை ராஜா அந்த கும்பலிடம் உரிமையாளர் இல்லாதபோது கடைக்குள் எதற்கு சென்று பொருளை எடுக்கிறீர்கள்..? அவ்வாறு செய்யக்கூடாது என்று கூறியுள்ளார். இதை தொடர்ந்து, ஆறு பேர் கொண்ட கும்பல் மற்றும் திசைகரை ராஜா ஆகியோரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
மேலும் படிக்க: மவோயிஸ்ட்டுகள் கூட திருந்திடுவாங்க… ஆனா, இந்த RSS-காரங்க திருந்த மாட்டாங்க ; செல்வப்பெருந்தகை!!
இதில் அந்த கும்பல் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து வியாபாரி திசை கரை ராஜாவின் தலையில் வெட்டி உள்ளது. இதைத் தொடர்ந்து, அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தாக்குதல் நடத்திய ஒரு நபரை வியாபாரிகள் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளனர். மற்ற ஐந்து பேர் பேர் தப்பி ஓடி விட்டனர்.
தலையில் காயம் அடைந்த வியாபாரி திசை கரைராஜா தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து, தப்பி ஓடிய கும்பலை கைது செய்ய வேண்டுமென வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் தகராறில் ஈடுபட்ட கும்பல் வியாபாரியை அறிவாளால் வெட்டும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது