உண்மையை சொன்னால் ஏத்துக்க மாட்டாங்க… திமுக அரசின் 3 ஆண்டுகால ஆட்சிக்கு இதுவே சாட்சி ; ஆதாரத்தை காட்டிய ஆர்பி உதயகுமார்!!!

Author: Babu Lakshmanan
21 May 2024, 10:56 am

மூன்று ஆண்டு சாதனையாக முதலமைச்சர் கூறிவரும் மதுரை கலைஞர் நூலகத்தில் 2 நாள் மழைக்கே தாக்குப்பிடிக்க முடியாமல் இரண்டு பிரிவுகள் மூடப்பட்டுள்ளதாகவும், கள நிலவரத்தை தெரிவித்துக் கொண்டு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று
சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது :- கடந்த இரண்டு நாட்களாக மதுரையில் பெய்து வருகிற கோடை மழையிலே மதுரை தத்தளித்து கொண்டிருக்கின்ற ஒரு நிலையை நான் பார்க்கின்றோம். அதிலே குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழக அரசு இந்த மூன்று ஆண்டு சாதனையாக மதுரையிலே அடையாளமாக சொல்லப்படுகிற கலைஞர் நூலகம் சிறு மழைக்கே தாங்காத ஒரு நிலையை நாம் பார்க்கின்றோம்.

மேலும் படிக்க: ஏற்கனவே வறண்ட பூமியாக்கியது போதாதா..? அத்துமீறும் கேரள அரசு… பச்சைத்துரோகம் செய்யும் திமுக ; சீமான் கொந்தளிப்பு…!!

இந்த நூலகத்திலே மீண்டும் தண்ணீர் புகுந்துள்ளது. ஆனால் அவர்கள் மறுப்பார்கள், அதனால் தான் அதனுடைய புகைப்படத்தோடு இதை அரசினுடைய கவனத்திற்கு நான் கொண்டு வருகின்றேன்.  இரண்டு பிரிவுகள் தற்காலிகமாக மூடல் என்கிற ஒரு சாதனையை நாம் பார்க்கின்றோம். தற்போது தான் இந்த நூலகம் அரசின் சாதனையாக  முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் மதுரையிலே நாங்கள் கலைஞர் நூலகத்தையும், ஜல்லிக்கட்டு ஏர் தழுவுதல் அரங்கமும் கட்டியிருக்கும் என்று சொல்லி இருக்கிறார்கள்.

 ஜல்லிக்கட்டு அரங்கத்திற்கு மின்சார கட்டணம் அரசுக்கு செலுத்தவில்லை என்று பத்திரிக்கை செய்தி வெளியான பிறகு தான் அங்கே மின்சார கட்டணம் செலுத்தப்பட்டது என்ற உண்மை நிலவரம்  முதலமைச்சர்  தெரியுமா என்று தெரியவில்லை.அதுபோல கலைஞர் நூலகத்திலே கீழ் தளத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பிரிவு, கலைக்கூடம்பிரிவு கனமழையில் மூடப்பட்டு இருக்கிறது

இன்று இரண்டு பிரிவுகள் தற்காலிகமாக மூடப்பட்டு இருக்கிற இந்த செய்தி முதலமைச்சர் நன்கு அறிவாரா என்று நமக்கு தெரியவில்லை. இந்த நூலகம் அரசின் சாதனையாக பறைசாற்றப்பட்டது, ஆனால் சாதனை வேதனையாக மாறி இருக்கிறது. இதை  முதலமைச்சர் சீர்படுத்த முன்வருவாரா ?

அது மட்டுமல்ல மதுரையில் இருக்கிற மையமாக இருக்கிற மாட்டுத்தாவணி உள்ள காய்கறி மார்க்கெட், பூ மார்க்கெட் உள்ளிட்ட அனைத்து இடங்களும் இன்றைக்கு நோய் தொற்று பரப்புகின்ற ஒரு சூழ்நிலையை நாம் பார்க்கிறோம். தொடர்ந்து பெய்து வருகிற மழையாலே காய்கறிகள் வாங்குவதற்கும், பூ வாங்குவதற்கும் மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டை நுழையும் முன்பே நோய்களை வாங்கும் நிலையை சீர் செய்ய மதுரை மாவட்ட நிர்வாக முன்வருமா? என்று மதுரை மாவட்ட மக்கள் இங்கே வேதனையோடு தங்களுடைய கவலையை தெரிவிக்கின்றார்கள்.

தினந்தோறும் 10,000 மேற்பட்டவர்கள் அங்கே ஆண்களும், பெண்களும்  பொருட்களை வாங்கி சொல்லுகின்றார்கள். அப்படி செல்கின்ற அந்த நிலைமையிலே அங்கே போதிய கழிப்பறை வசதிகள் இல்லை என்று ஏற்கனவே எடப்பாடியார் உடனடியாக சீர்படுத்தி நடவடிக்கை வேண்டும் என்று அரசு கோரிக்கை வைத்தார்கள். ஆனாலும் நடவடிக்கை எடுக்கவில்லை.

குப்பைகளை தூளாக்க மொத்தமாக ஒரே இடத்தில் கொட்டி வைப்பதால் அங்கே புழுக்கள் உற்பத்தியாகி துர்நாற்றம் வீசுகிற ஒரு கொடுமையான நிலையை நாம் பார்க்கிறோம். ஒரு நாள் மழைக்கே மார்க்கெட் தாங்காமல் மார்க்கெட் நுழைவு வாசலில்  சாக்கடை தண்ணி ஓடுகிறது.

திருமணங்களுக்கு, சுப நிகழ்ச்சிகளுக்கு உள்ள விழாக்களுக்கு, அதேபோல ஹோட்டல்களுக்கு இப்படி பல்வேறு நிலைகளில் அனைவருமே சங்கமிக்கிற ஒரு சங்கமம் தான் காய்கறி மார்க்கெட், பூ மார்க்கெட். ஆனால், அங்கே வருபவர்கள் நோயோடு திரும்பி சொல்லுகிறார்கள். இன்றைக்கு பத்திரிகைகளை கூட செய்தியாக வெளியாகி இருக்கிறது.

உண்மை ஒருநாள் வெட்ட வெளிச்சமாக உலகத்திற்கு தெரிய வரும் என்பதைப்போல, பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டு விட்டது என்பதை போல அரசு உள்ளது. கலைஞர் நூலகம் அரசின் சாதனையாக மூன்றாண்டு சாதனையாக பார்க்கப்பட்ட நூலகம், இன்றைக்கு படிப்பதற்கு செல்ல முடியாத ஒரு நிலை ஏற்பட்டிருக்கிறது. இதை சீர்படுத்துவதற்கும் ஏற்கனவே சட்டமன்றத்தில் இது குறித்து நான் எடப்பாடியார் வழிகாட்டுதலோடு எடுத்து வைத்தேன்.

அப்போது மாவட்ட  அமைச்சர்கள் அந்த செய்தியிலே உண்மை இல்லை என்று மறுத்தார்கள். ஆனால் எங்க அப்பன் குதிரைக்குள் இல்லை என்பதை போல, இப்போது வெட்ட வெளிச்சமாக இந்த ஒரு நாள் மழைக்கே இங்கு இரண்டு தளங்கள் இரண்டு பிரிவுகள் இன்றைக்கு மூடப்பட்டுள்ள காட்சி சாட்சியாக உள்ளது. தண்ணீரை வெளியேற்றி இங்கே வருகிற மக்களை படிப்பதற்கு நீங்கள் வசதிகள் செய்து தர முன்வருவீர்களா? அரசு உண்மையை ஏற்றுக் கொள்ளுமா?  கள நிலவரத்தை தெரிந்து  நடவடிக்கை எடுப்பதற்கு என் அரசு முன்வருமா? என் கேள்வி எழுப்பினார்.

  • Vidamuyarchi OTT release announcement ரசிகர்ளுக்கு பொங்கல் பரிசு கொடுத்த லைக்கா…விடாமுயற்சி படத்தின் OTT-உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்…