நானும் மனுஷி தானே.. என்ன டிரஸ் போட்டாலும் இப்படி பேசுறீங்க.. அனிகா சுரேந்திரன் வருத்தம்..!

Author: Vignesh
21 May 2024, 2:39 pm

2015 இல் கௌதம் மேனன் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவான என்னை அறிந்தால் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா. அந்த படத்தின் மூலம் நடிகர் அஜித்தின் மகளாக அழைக்கப்படும் அனிகா தற்போது இளம் நடிகையாக மாறி தற்போது புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதை தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்த இவர், மீண்டும் அஜித்தின் மகளாக விஸ்வாசம் படத்தில் நடித்திருந்தார். குழந்தை நட்சத்திரமாக மட்டுமே நடித்து வந்த அனிகா தற்போது ஹீரோயினாக மாறியுள்ளார். ஆம், மலையாளத்தில் உருவாகியுள்ள ஓ மை டார்லிங் எனும் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார்.

மேலும் படிக்க: இது தாறு மாறான கார்.. புதிய காரை வாங்கிய கையோடு Vijay Tv சீரியல் நடிகை வெளியிட்ட வீடியோ..!

ஆம், ஹீரோயினாக அறிமுகமான முதல் படத்திலேயே ஹீரோவுடன் மிகவும் நெருக்கமான காட்சிகளில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி லிப்லாக் காட்சியிலும் நடித்துள்ளார் அனிகா.

கதாநாயகி ஆனதும் முதல் படத்திலேயே அனிகா இப்படியா என ரசிகர்கள் வாயை பிளந்து வருகின்றனர்.

மேலும் படிக்க: ஆபாச போஸ் கொடுத்து வெளியான அஜித்தின் First Look போஸ்டர்.. இப்போ எங்க போச்சு உங்க கொள்கை..!

தற்போது, ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் உருவாகி உள்ள PT சார் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் அனிகா நடித்துள்ளார். இந்தநிலையில், பேசிய அனிகா சினிமாவில் இருக்கும் பெண்கள் பெரிய அளவில் விமர்சனங்களை சந்திக்கிறார்கள். கவர்ச்சியாக உடை அணிவது என்னுடைய தனிப்பட்ட விஷயம், ஸ்டைலாக இருக்க பிடிக்கும்.
என்ன உடை அணிந்தாலும் விமர்சனம் செய்கிறார்கள், தவறாக பேசுகிறார்கள், நானும் ஒரு மனுஷிதான் என பேசியுள்ளார்.

  • Why no action is taken even after filing a complaint against Vijay and Trisha விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!