தேர்தல் முடிவுக்குப் பிறகு 2 சீனியர் அமைச்சர்களுக்கு கல்தா…? கடும் கோபத்தில் CM ஸ்டாலின்… பரபரப்பில் அறிவாலயம்..!!!

Author: Babu Lakshmanan
22 May 2024, 11:26 am

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் அடுத்த மாதம் 4-ந்தேதி வெளியான பிறகு மத்தியில் புதிய அரசு அமையவிருக்கிறது. அந்த சமயம் தமிழக அமைச்சரவையில் பல்வேறு மாற்றங்களை செய்ய முதலமைச்சர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தலுக்கு முன்பாகவே எந்த் தொகுதியில் திமுகவுக்கு வாக்கு குறையுதோ, அந்தத் தொகுதியின் பொறுப்பாளர்களான அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருந்தார். தற்போது தி.முக. கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெறும் என்று உளவுத்துறை ரிப்போர்ட் அளித்திருந்தாலும், தேர்தல் வேலைகளில் சரிவர செயல்படாதவர்கள் பற்றியும் புகார்கள் சென்றுள்ளன.

மேலும் படிக்க: ‘எங்க கிணத்த காணோம்-ங்க’… வடிவேலு பாணியில் நடந்த சம்பவம் ; கவனத்தை ஈர்த்த கிராம மக்களின் போஸ்டர்…!!

அந்த வகையில் 10 அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் மீது புகார்கள் சொல்லப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதனால் அமைச்சர்களும், மாவட்டச் செயலாளர்களும் ஒருவித கலக்கத்துடனேயே உள்ளனர். இந்த நிலையில் தேர்தல் முடிவுக்கு முன்னதாகவே 2 அமைச்சர்கள் பதவியும் பறிக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகி வருகிறது. அதாவது, கைத்தறி துறை அமைச்சர் ஆர்.காந்தி மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து மாற்றப்படலாம் என்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அதுமட்டுமின்றி, சீனியர் அமைச்சரான தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வசம் உள்ள மணல் குவாரி, சுரங்கங்கள் மற்றும் கனிம வளத்துறையை வேறு ஒரு அமைச்சருக்கு பிரித்துக் கொடுக்க அதிக வாய்ப்பு உள்ளதாகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மணல் குவாரி மற்றும் கனிமவளத்துறையில் நடந்த புகார்கள் காரணமாக அமலாக்கத்துறை விசாரணை தீவிரமாகி வரும் நிலையில், இந்த மாற்றங்களை செய்ய முதலமைச்சர் முடிவு செய்துள்ளதாவும் தி.மு.க. வட்டாரத்தில் பேசப்படுகிறது.

ஆனால் அமைச்சர் துரைமுருகன் கனிம வளத்துறையை தன்னிடம் வைத்துக் கொண்டு, அதற்கு பதிலாக நீர்வளத்துறையை வேண்டுமானால் அவர் விட்டுக் கொடுப்பார் என்ற தகவலும் கசிந்து வருகிறது.

அதுமட்டுமில்லாமல், ஒருவேளை மத்தியில் இண்டியா கூட்டணி ஆட்சியமைந்தால், தற்போதைய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனை மத்திய நிதித்துறை அமைச்சராக்கவும் முதலமைச்சர் ஸ்டாலின் முயற்சிப்பார் என்று சொல்லப்படுகிறது. அதேபோல, அமைச்சரவையை மாற்றி அமைக்கும் போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க. எம்.எல்.ஏ.வான ராஜேந்திரனை அமைச்சரவையில் சேர்க்க வாய்ப்புளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

தற்போது வரை வெறும் தகவல்களே வெளியாகி வரும் நிலையில், இலாக்காக்களை மாற்றி அமைப்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டால் மட்டுமே உண்மை தெரிய வரும்.

  • Sivakarthikeyan transition from TV to big screen சீரியல் வாய்ப்புக்கு ஏங்கிய சிவகார்த்திகேயன்..NO சொன்ன சின்னத்திரை நடிகர்..!
  • Views: - 186

    0

    0