மேற்கு வங்கத்தில் கிடந்த பக்கத்து நாட்டு எம்பியின் உடல்… கொலையா செய்யப்பட்டாரா..? இருநாடுகளிடையே பரபரப்பு..!!

Author: Babu Lakshmanan
22 May 2024, 12:44 pm

மாயமான வங்கதேசம் எம்.பி அன்வருல் அசீம் மேற்கு வங்கத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 12ம் தேதி மருத்துவ சிகிச்சைக்காக வங்கதேச எம்.பி அன்வருல் அசீம் கொல்கத்தா வந்திருந்தார். ஆனால், 14ம் தேதிக்கு பிறகு, அன்வருல் அசீமை தொடர்பு கொள்ள இயலாத நிலை ஏற்பட்டது. அவரது செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. காணாமல் போன அன்வருல் அசீமை போலீசார் தேடி வந்தனர்.

மேலும் படிக்க: மழை நீர்வடிகாலுக்காக குழி தோண்டும் போது விபரீதம்… சரிந்து விழுந்த கடை ; பொக்லின் இயந்திரத்தில் முட்டுக் கொடுத்த அதிகாரிகள்!!!

இந்நிலையில், நியூ டவுன் பகுதியில் அன்வருல் அசீம் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம்..? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சந்தேகத்தின் அடிப்படையில் வங்கதேச தலைநகர் தாக்காவில் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • monalisa viral girl soon get chance to act in serial பட வாய்ப்பு பறிபோனால் என்ன?… வைரல் பெண் மோனலிசாவுக்கு வந்த திடீர் வாய்ப்பு?