இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கிய போதை கும்பல்.. கத்தியை காட்டி மிரட்டல்.. சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது!

Author: Udayachandran RadhaKrishnan
22 May 2024, 2:48 pm

இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கிய போதை கும்பல்.. கத்தியை காட்டி மிரட்டல்.. சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது!

சென்னையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 15க்கும் மேற்பட்ட வாகனங்கள் மது போதையில் இளைஞர்கள் சுக்குநூறாக அடித்து கொண்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோடாம்பாக்கம் சுபேதர் கார்டன், வரதராஜபேட்டை மற்றும் டிரஸ்ட் புரத்தில் தெருவில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனங்களை அடித்த நொறுக்கிய போது அதே பகுதியை சேர்ந்த ரியாசுதீடன, முருகலிங்கம், இம்ரான், ஆசைபாண்டி உள்ளிட்ட 5 பேர் தட்டிக்கேட்டுள்ளனர்.

ஆனால் அந்த மதுபோதை கும்பல் கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். பின்னர் அங்கிருந்த மாவுக்கடை மற்றும் மளிகை கடைகளுக்குள் புகுந்து சூறையாடி மாமூல் கேட்டு மிரட்டி, தாமஸ் என்பவரை கத்தியால் வெட்டியுள்ளனர்.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்ததும் அந்த கும்பல் தப்பியது. இதில் காயமடைந்த தாமஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க: முடியல…என்ன பண்ணாலும் கேட் போடறாங்களே… டிடிஎப் வாசனுக்கு மீண்டும் செக் வைத்த போலீஸ்..!

பின்னர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், வரதராஜபேட்டையை சேர்ந்த குகன் மற்றும் 3 சிறுவர்கள் உள்ளிட் 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் 3 பேர் தலைமறைவான நிலையில் போலீசார் தேடி வருகின்றனர்.

  • china decided to ban american movies shocking marvel fans சூப்பர் ஹீரோ திரைப்பட நிறுவனங்களுக்கு ஆப்பு வைக்கப்போகும் சீனா?