கோவிலில் திருட்டு போன நகை.. ஒரு வாரம் கழித்து அதே இடத்தில் வைத்து சென்ற திருடர்களால் பரபரப்பு!
Author: Udayachandran RadhaKrishnan23 May 2024, 1:52 pm
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த அத்திமுகம் கிராமத்தில் இந்து சமய அறநிலையலத்துறைக்கு கட்டுப்பாட்டில் 13 நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த ஐராதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

இந்த கோவிலில் கடந்தவாரம் வழக்கம் போல சுவாமிக்கு பூஜைகள் செய்யப்பட்டு மாலை அர்ச்சகர் கோவில் பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று உள்ளார். இந்த நிலையில் அடுத்தநாள் காலையில் வந்து பார்த்தபோது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பொருட்கள் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்து பேரிகை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
பேரிகை போலீசார் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர் விசாரணையில் 300 கிராம் வெள்ளி பொருட்கள் கோவிலில் இருந்து மர்ம நபர்கள் திருடி சென்றது விசாரனையில் தெரியவந்துள்ளது.
இதுக்குறித்து போலிசார் விசாரணை நடத்தி வந்தநிலையில், இன்று காலை கோவிலில் திருடப்பட்ட பொருட்கள் மூட்டையில் கட்டியவாறு கோவில் முன்பே மர்மநபர்கள் வைத்து சென்றுள்ளனர்.
மேலும் படிக்க: கோவிஷீல்டு நிறுவனத்தின் கேன்சர் மருந்துகளை நிறுத்த முடிவு : இந்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தகவல்!
கோவிலில் திருடப்பட்டவை மீண்டும் கோவில் முன்பே வைத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி உள்ளது.