கஞ்சா சப்ளைக்கு வாட்ஸ்அப் குழு… சிறுவர்கள் தான் டார்க்கெட் ; அட்மினை கொத்தாக தூக்கிய போலீசார்…!!!

Author: Babu Lakshmanan
23 May 2024, 2:28 pm

கன்னியாகுமரி அருகே சிறுவர்களை வாட்ஸ் ஆப் குழு மூலம் ஒருங்கிணைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை கைது குளச்சல் போலீசார் செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் கடற்கரை கிராமங்களை சேர்ந்த சிறுவர்களை வாட்ஸ் ஆப் குழு மூலம் ஒருங்கிணைத்து ஒரு கும்பல் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் குளச்சல் தனிப்படை போலீசார் நேற்று மாலை குளச்சல் லியோன்நகர் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க: நாகரீகம் பற்றி எங்களுக்கேவா..? தமிழர்களை திருடர்கள் போல சித்தரிப்பதா? பிரதமர் மோடிக்கு எதிராக சீறிய சீமான்!!!

அப்போது அந்த பகுதியில் இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கு இடமாக வந்த மூன்று இளைஞர்களை தடுத்து நிறுத்த முயன்ற போது, இருவர் தப்பியோடிய நிலையில், அபிஷ் என்ற இளைஞர் போலீசாரின் பிடியில் சிக்கினார். அவரிடம் விசாரணை நடத்திய போது, அபிஷ் அவரது சகோதரர் அனிஷ் மற்றும் விஜின் ஆகிய மூன்று இளைஞர்களும் வாட்ஸ் ஆப் குழு மூலம் சிறுவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து, அபிஷை கைது செய்த குளச்சல் போலீசார் அவரிடம் இருந்த 100 கிராம் கஞ்சா, செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்ததோடு, தப்பியோடிய இருவரையும் தேடி வருகின்றனர்.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 549

    0

    0