கேரள அரசு புதிய அணை கட்ட முடியாது.. மீறினால் அதிமுக உரிமை மீட்பு குழு ஆக்ஷன் எடுக்கும்..ஓபிஎஸ் வாய்ஸ்!

Author: Udayachandran RadhaKrishnan
23 May 2024, 10:05 pm

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த சௌடேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா கடந்த 3 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இக்கோவிலின் 3ம் நாள் நிகழ்ச்சியை முன்னிட்டு சௌடேஸ்வரி அம்மன் கோவிலுக்கு முன்னாள் முதல்வரும், போடி சட்டமன்ற உறுப்பினருமான ஓ. பன்னீர் செல்வம் வருகை தந்து சாமி தரிசனம் செய்தார். ஒபிஎஸ்க்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

பின்னர் கோவிலில் இருந்த பொதுமக்கள் அனைவரையும் சந்தித்தார். பின்பு பத்திரிகையாளர்கள் கேரளா அரசு புதிய அணை கட்டி வருவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஓபிஎஸ்.

தமிழக அரசின் அனுமதி இல்லாமல் கேரள அரசு அணை கட்ட முடியாது. இது போன்று கேரள அரசு தொடர் நடவடிக்கையில்‌‌ ஈடுபடும் பட்சத்தில் ‘அதிமுக உரிமை மீட்பு குழு கடுமையாக எதிர்ப்போம் என ஒபிஎஸ் பேட்டியளித்தார்.

மேலும் படிக்க: காவலரை டிக்கெட் எடுக்க சொன்னதால் பழிக்கு பழியா? NO PARKINGல் நின்ற அரசு பேருந்துக்கு அபராதம்.. நெட்டிசன்கள் விமர்சனம்!

மாண்புமிகு அம்மா இருக்கும் பொழுது முல்லைப் பெரியாறு அணையை 142 அடி அளந்து 152 அடி உயர்த்த சட்ட போராட்டம் நடத்தி அதில் வெற்றியும் பெற்றார் என குறிப்பிட்டார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 269

    0

    0