குடும்பத்தில் வெடித்த பிரச்சனை?.. தினமும் சண்டை போடும் கணவர்.. பகீர் கிளப்பிய காஜல் அகர்வால்..!

Author: Vignesh
24 May 2024, 10:42 am

மும்பையில் பிறந்து வளர்ந்த நடிகை காஜல் அகர்வால் பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். அதன்பின் தெலுங்கில் வெளியான மகதீரா மற்றும் தமிழில் நான் மகான் அல்ல போன்ற படங்கள் அவரது வெற்றிக்கு பிள்ளையார் சுழி போட்டது. தொடர்ந்து தமிழில் அஜித் , விஜய், தனுஷ், சூர்யா என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பெரும் புகழ் பெற்றார்.

kajal aggarwal - updatenews360

மேலும் படிக்க: போட்டி போட்டு அஜித் படத்தின்- OTT ரைட்ஸை தட்டித் தூக்கிய நிறுவனம்.. தல ஃபேன்ஸ் ரெடியா இருங்க..!

தமிழில் சரோஜா, சிங்கம், மாற்றான், துப்பாக்கி, ஆல் இன் ஆல் அழகு ராஜா, ஜில்லா, மாரி, விவேகம், மெர்சல் என பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றார். தமிழ் மட்டும் அல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

kajal aggarwal - updatenews360

மேலும் படிக்க: ஆத்தாடி.. பிரியங்கா சோப்ரா கழுத்தில் இருக்கும் நெக்லஸின் மொத்த மதிப்பு எவ்வளவு தெரியுமா?

இதனிடையே பிரபல தொழிலதிபர் கெளதம் கிச்சுலு என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட காஜல் அகர்வாலுக்கு ஒரு மகன் இருக்கிறான். அவ்வப்போது வெகேஷன் செல்லும்போது விமானநிலையில் மகனுடன் சேர்ந்து மீடியாக்கள் புகைப்படம் எடுக்க அது இணையத்தில் வெளியாகும்.

இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட காஜல் அகர்வாலிடம் உங்கள் கணவருடன் சண்டை வந்தால், எப்படி சமாதானம் செய்வீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு, பதிலளித்த காஜல் இன்று காலை கூட நாங்கள் இருவரும் சண்டை போட்டுக் கொண்டோம். தினமும், எங்களுக்குள் சண்டை வரும் எப்போது சண்டை வந்தாலும், என் கணவரை கட்டிப்பிடித்து மன்னிப்பு கேட்டு விடுவேன். இப்படித்தான் சமாதானம் செய்வேன் என காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.

  • Kudumbasthan Movie Blockbuster Hit பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன்…அதுக்குள்ள சின்னத்திரையில்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!!