எனக்கு அப்பவே தெரியும் MACHI.. RCB-யை கலாய்த்து நடிகர் ஜீவா வெளியிட்ட பதிவு..!

Author: Vignesh
24 May 2024, 11:51 am

நடப்பு ஐபிஎல் தொடரில் எலிமினேட்டர் சுற்று போட்டியில் பெங்களூரூ – ராஜஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் பெங்களூரூ அணி தோல்வியை தழுவி தொடரில் இருந்து வெளியேறியது. இந்தத் தோல்விக்கு காரணம் பெங்களூரூ அணியின் வீரர்கள் நடந்து கொண்ட விதம்தான் என்று கூறப்படுகிறது. முதல் 8 போட்டிகளில் 7ல் தோல்வியை தழுவிய பெங்களூரூ அணி, கடைசி 6 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று, பிளே ஆஃப்பிற்கு முன்னேறியது.

மேலும் படிக்க: அர்ஜென்ட்டா வந்துடுச்சு.. அங்க பாத்ரூம் கூட இல்லை ஷாக் கொடுத்த காஜல் அகர்வால்..!

சென்னைக்கு எதிரான வாழ்வா…? சாவா..? ஆட்டத்தில் பெங்களுரூ அணி த்ரில் வெற்றி பெற்றது. போட்டி முடிந்த பிறகு வெற்றிக்களிப்பில் இருந்த ஆர்சிபி வீரர்கள், சென்னை வீரர்களை கைகுலுக்கக் கூட மறந்து வெற்றிக் கொண்டாட்டத்தில் மிதந்தனர். அடுத்த சில நாட்களிலேயே எலிமினேட்டர் போட்டி இருந்த நிலையில், அதற்கான தயார் மனநிலையில் ஆர்சிபி வீரர்கள் இல்லை என்பதையே இந்த போட்டியின் முடிவு காண்பிப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றதையே ஒரு ஐபிஎல் கோப்பை வென்றதாக நினைத்துக் கொண்டாடிய ஆர்சிபி அணி நாக் – அவுட் போட்டியின் தீவிரத்தை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்பதையே இந்த தோல்வி காட்டுகிறது. அதேவேளையில், வெற்றி பெறுவதற்கு முன்பாக ஓவராக ஆடக்கூடாது என்று ஆர்சிபி ரசிகர்களை சென்னை அணியின் ரசிகர்கள் மீம்ஸ் போட்டு விமர்சித்து வருகின்றனர்.

RCB

தற்போது, நடிகர் ஜீவாவும் எஸ்எம்எஸ் பட சீனை மீமாக பதிவிட்டு பெங்களூர் அணி கலாய்த்து இருக்கிறார். அது மட்டுமின்றி எஸ்எம்எஸ் புகழ் நடிகை அனுயாவும் ஒரு மீமை பதிவிட்டு இருக்கிறார் இரண்டும் தற்போது வைரலாகி வருகிறது.

RCB
  • amazon prime bagged jana nayagan movie for 115 crores ஜனநாயகன் படம் தள்ளிப்போனதுக்கு இதுதான் காரணம்? ஓபனாக உடைத்து பேசிய பத்திரிக்கையாளர்…