முன்னாள் மனைவி கொடுத்த புகார்… வீடு தேடிச் சென்று முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸை கைது செய்த போலீஸார்..!!

Author: Babu Lakshmanan
24 May 2024, 12:11 pm

முன்னாள் மனைவி கொடுத்த புகாரின் பேரில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸை போலீசார் கைது செய்தனர்.

கடந்த 2021ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வடமாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, முதலமைச்சரின் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

மேலும் படிக்க: ‘கொன்னு புதைச்சிட்டு போயிட்டே இருப்பேன்’… மகனின் காதலியை மிரட்டிய தந்தை ; நாடகமாடி கர்ப்பத்தையும் கலைத்த கொடூரம்!!

இதுதொடர்பான வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்க்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து ராஜேஷ் தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து தண்டனை உறுதி செய்தது. இதனையடுத்து ,ராஜேஷ் தாஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து கைதுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.

இதனிடையே, காதல் திருமணம் செய்து கொண்டு பாலியல் புகாரில் ராஜேஷ் தாஸ் சிக்கியதை அடுத்து, அவரது மனைவி பீலா விவாகரத்து செய்ய முடிவு எடுத்துள்ளார். பீலா ராஜேஷ் என்ற பெயரை பீலா வெங்கடேசன் என்று தனது தந்தை பெயருடன் இணைத்து மாற்றிக்கொண்டார்.

இந்நிலையில், ராஜேஷ் தாசும், பீலாவும் சேர்ந்து செங்கல்பட்டு மாவட்டம் தையூரில் வாங்கிய பங்களா வீடு, தற்போது பீலா வெங்கடேசன் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. பிரிந்து இருக்கும் மனைவி பீலாவின் வீட்டிற்கு ராஜேஷ் தாஸ் 10 நபர்களுடன் அத்துமீறி நுழைந்து தகராறில் ஈடுபட்டதாகவும், மேலும், காவலாளியை மிரட்டி தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து பீலா வெங்கடேசன் கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பாக ராஜேஷ் தாஸ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து காவல்நிலையத்தில் வைத்து ராஜேஷ் தாசிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?