புனே PORSCHE கார் விபத்தில் திடீர் ட்விஸ்ட்.. 17 வயது சிறுவனின் தாத்தா கைது.. அதிர வைத்த காரணம்!!

Author: Udayachandran RadhaKrishnan
25 May 2024, 2:59 pm

புனேவில் அமைந்துள்ள கல்யாணிநகர் அருகே கடந்த 19ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை பிரபல கட்டிடத் தொழிலதிபரின் மகனான 17 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற போர்ஷே கார், எதிரே சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியதில் அதில் பயணித்த இரண்டு இளம் மென்பொருள் பொறியாளர்கள் உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், சிறுவன் மது அருந்தி கார் ஓட்டியதில் தான் விபத்துக்குள்ளானது தெரிய வந்துள்ளது.

மேலும் 15 மணி நேரத்தில் சிறுவனுக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம், கட்டுரை எழுத வேண்டும் என நீதி வழங்கியது சர்ச்சையானது. இது குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் கடும் விமர்சனம் செய்து வந்தனர்.

மேலும், இந்த வழக்கில் இருந்து சிறுவனை தப்பிக்க வைக்க, அவரது தாத்தா பின்னால் இருந்து வேலை செய்தாக குற்றசாட்டு எழுந்தது. இந்த நிலையில், சிறுவன் வேதாந்த்தின் தாத்தா சுரேந்திரா அகர்வால் இன்று கைது செய்யப்பட்டார்.

கார் ஓட்டுநர் கங்காராமை மிரட்டி, கார் விபத்து பழியை ஏற்க வற்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில், சிறுவனின் தாத்தா கைது செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.

மேலும் படிக்க: குற்றவாளிகள் குறித்து தகவல் கொடுத்தால் ₹25 லட்சம் சன்மானம்.. கோவையில் NIA ஒட்டிய போஸ்டர்!

இந்த விவகாரத்தில் சிறுவனின் தந்தை விஷால், ஏற்கனவே கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவ்வழக்கில் சாட்சிகளைக் கலைக்க முயற்சி நடந்ததாக கூறப்படும் நிலையில், காவல்துறை தரப்பில் விசாரித்து சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என புனே காவல் ஆணையர் அமிதேஷ் குமார் உறுதியளித்துள்ளார்.

  • Nayanthara Test movie news சிம்பு பிறந்த நாளுக்கு நயன்தாரா எடுக்க போகும் திடீர் முடிவு…ரசிகர்களுக்கு செம ட்விஸ்ட்..!