கூகுள் மேப்பை பார்த்து காரில் கேரளாவுக்கு சுற்றுலா வந்த 4 பேர்..நூலிழையில் உயிர் தப்பியது!
Author: Udayachandran RadhaKrishnan25 May 2024, 7:50 pm
கூகுள் மேப்பை பார்த்து காரில் கேரளாவுக்கு சுற்றுலா வந்த 4 பேர்..நூலிழையில் உயிர் தப்பியது!
ஐதராபாத்தை சேர்ந்த 4 பேர் கேரளாவிற்கு சுற்றுலா வந்துள்ளனர்.ஒரு பெண் உள்பட 4 பேரும் ஒரே காரில் ஒன்றாக வந்து கேரளாவின் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்துள்ளனர்.
ஆலப்புழாவிற்கு காரில் சென்று போது வழி தெரியாததால் கூகுள் மேப்ஸ் போட்டுக்கொண்டு காரை ஓட்டியவர் சென்றுள்ளார்.
அப்போது கார் குருபந்தரா என்ற இடத்தில், சிற்றோடை ஒன்றில் நீர் நிரம்பி வழிந்து சாலையை மூழ்கடித்துள்ளது. சாலைக்கும் சிற்றோடைக்கும் வித்தியாசம் தெரியாமல் இருந்துள்ளது.
மேலும் படிக்க: 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு… மொத்தமாக பதிவான வாக்கு சதவீதம் எவ்ளோ தெரியுமா? டாப்பில் மேற்கு வங்கம்!
உள்ளூர் மக்களுக்கு இந்த விஷயம் தெரியும் என்பதால் அந்த சாலையை பயன்படுத்தாமல் இருந்து இருக்கிறார்கள்.
ஆனால், ஐதராபாத்தை சேர்ந்த சுற்றுலா குழுவினர் கூகுள் மேப்ஸ்சை பார்த்து நேராக சிற்றோடைக்குள் காரை விட்டனர்.
சாலை என்று நினைத்தவர்களுக்கு கார் மூழ்கிய பிறகே ஓடைக்குள் கார் பாய்ந்தது தெரியவந்து உள்ளது. நீரில் மூழ்கி உயிருக்கு போராடியவர்களை உடனடியாக உள்ளூர் மக்களுடன் சேர்ந்து போலீசார் மீட்டனர்.
எனினும், அவர்கள் வந்த கார் நீரில் அடித்து செல்லப்பட்டது. காரை மீட்கும் பணி நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.