குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து சிறுமி பாலியல் பலாத்காரம்.. 23 வயது இளைஞரின் வெறிச்செயல்!

Author: Udayachandran RadhaKrishnan
25 May 2024, 9:42 pm

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டை அடுத்த விருவீடு அருகேவுள்ள வளையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நிதிஷ் (23).

இவர் அந்தப் பகுதியில் உள்ள 15 வயது சிறுமியை ஒருவரை குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, மயக்க நிலையில் இருந்த போது, பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: 20 பேரை காவு வாங்கிய தீ விபத்து.. விளையாட்டுத் திடலில் பயங்கர தீ : குழந்தைகள், பெரியவர்கள் சிக்கி பலி!

இதுகுறித்து, நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் செய்தனர்.இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நிதிஷ் (23) என்ற இளைஞரை போச்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து அவரை, நிலக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • director entered van when shalini pandey changing dress உடை மாற்றும் அறையில் திடீரென நுழைந்த இயக்குனர்! அதிர்ந்துப்போன ஷாலினி பாண்டே… ஒரு அதிர்ச்சி சம்பவம்!