இன்னும் 2 நாளில் தயாரா இருங்க… நிர்வாகிகளுக்கு த.வெ.க தலைவர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு!

Author: Udayachandran RadhaKrishnan
26 May 2024, 11:25 am

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கி இருக்கிறார்.

தற்போது கோட் படத்தில் நடித்து முடித்த பிறகு மீண்டும் ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு அடுத்ததாக சினிமாவை விட்டு அரசியல் பயணத்தில் முழுவதுமாக ஈடுபடஉள்ளார்.

மேலும், வரும் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: வந்தாச்சு அரசு பொருட்காட்சி.. எத்தனை நாள் இருக்கும்? கோவை மக்களுக்கு குஷியான நியூஸ்!

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அறிக்கை ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதில், மே 28 ஆம் தேதி உலக பட்டினி தினம் அனுசரிக்கப்படவுள்ள நிலையில், அனைவருக்கும் உணவு கிடைத்திடவேண்டும் என்பதை வலியுறுத்தி 28-05-2024 அன்று அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட, அணி, கிளை, நகரம், ஒன்றியம், மற்றும் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் உள்ளிட்ட யாவரும் செய்யவேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

  • ags condition for producing str 50 பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?