சென்னை அப்பல்லோவில் வைகோ அனுமதி.. அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு : கட்சியினருக்கு வேண்டுகோள்!

Author: Udayachandran RadhaKrishnan
27 May 2024, 1:02 pm

நேற்று நாகர்கோவிலில் மதிமுக நிர்வாகி இல்ல திருமண விழாவுக்கு மதிமுக தலைவர் வைகோ கலந்துகொள்வதற்காக நேற்று முன்தினம் திருநெல்வேலி வந்து இருந்தார்.

சகோதரர் வீட்டில் தங்கி இருந்த வைகோ இரவில் வீட்டிற்குள் தவறி விழுந்து தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதாக அவரது மகன் துரை வைகோ தெரிவித்து இருந்தார். மேலும், உடனடியாக நெல்லையில் இருந்து தூத்துக்குடி விமான நிலையம் அழைத்துவரப்பட்டு விமானம் மூலம் சிகிச்சைக்காக சென்னை அழைத்து வரப்பட்டார் வைகோ.

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள வைகோவிற்கு இன்று தோள்ப்பட்டையில் சிறிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது என கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: லாரி ஓட்டுநர்களிடம் லஞ்சம் வாங்கும் காவலர்கள்.. மதுவிலக்கு சோதனைச்சாவடியில் ஷாக்.. VIRAL VIDEO!

சிறிய அளவிலான காயம் என்றும் , சிகிச்சைக்கு பின்னர் மதிமுக தலைவர் வைகோ பூரண நலம் பெறுவார் அதனால் கட்சியினர் அச்சம் கொள்ள வேண்டாம் என துரை வைகோ முன்னதாக தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!