போலீசை தாக்கும் போதை ஆசாமிகள்.. கையாலாகாத திமுக அரசு.. சட்டம் ஒழுங்கை காப்பாற்ற நடவடிக்கை எடுங்க : இபிஎஸ் காட்டம்!

Author: Udayachandran RadhaKrishnan
28 May 2024, 6:38 pm

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே சமீபத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவில் போதை ஆசாமிகள் காவலர்களைத் தாக்கிய சம்பவம் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் உலா வருவது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் போதைப்பொருள் கலாச்சாரம் அதிகரித்த காரணத்தினால் பொதுமக்கள், வியாபாரிகள் தாக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது போதை ஆசாமிகள் காவல்துறையினரையே பொதுவெளியில் தாக்கப்படும் சம்பவங்கள் கவலையளிக்கிறது.

கையாலகாத விடியா திமுக ஆட்சியாளர்களும், இதை தடுக்க வேண்டிய காவல்துறையினரும் விழிபிதுங்கி நிற்கும் அவலம் நிலவுகிறது.

மேலும் படிக்க: ஒரே இரவில் அடுத்தடுத்து 3 கொலைகள்… திடுக்கிடும் தாம்பரம் : தலைவர்கள் கண்டனம்!!

இத்தகையவர்களால் வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கு பெரும் பயமும் அச்சமும் பாதுகாப்பற்ற சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. என்ன செய்யப் போகிறார் காவல்துறையை கையில் வைத்திருக்கும் விடியா திமுக அரசின் முதல்வர் திரு. ஸ்டாலின்? இதுபோன்ற நிகழ்வுகள் இனி நடைபெறாவண்ணம் காவல்துறையை சுதந்திரமாக செயல்பட வைத்து , சட்டம் ஒழுங்கை பாதுகாக்க விடியா திமுக முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 231

    0

    0