காரில் வந்து ஆடுகளை திருடிய நபர்..விரட்டிப் பிடித்த மக்களுக்கு காத்திருந்த ஷாக் : போலீஸ் விசாரணை!

Author: Udayachandran RadhaKrishnan
29 May 2024, 6:16 pm

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தரணம்பேட்டை பகுதியில் சுல்தான் என்பவர் அந்தப் பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை டாட்டா சுமோவில் கடத்திச் செல்லும் போது பொதுமக்கள் விரட்டிப் பிடித்தனர்.

பின்னர் சுல்தான் என்பவரை பொதுமக்கள் அடித்ததில் மயங்கி விழுந்தார். காவல்துறையினர் அவரை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

விசாரணையில் சுல்தான் என்பவர் அதே பகுதியை சேர்ந்தவர் என்பதும், இந்த பகுதியில் ரஷிமா அத்தாவுல்லா குத்தூஸ் ஆகியவர்களின் ஆடுகளை திருடி சென்றது தெரியவந்தது.

மேலும் படிக்க: சுடுகாட்டுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை.. சடலத்தை புதைக்க முடியாமல் தவித்த கொடுமை!

இந்தப் பகுதியில் தொடர்ந்து ஆடுகள் திருடு போவதாக குடியாத்தம் காவல் நிலையத்தில் அப்பகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர்.

இன்று டாட்டா சுமோவில் ஆடுகளைத் திருடி பிடிபட்ட நபரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

  • gautham karthik shortened his name as grk தனது பெயரை மூன்றேழுத்தாக சுருக்கிக்கொண்ட கௌதம் கார்த்திக்? ஏன் இப்படி?