போலீசிடம் சிக்கிய நிவேதா பெத்துராஜ்.. இருக்கிற பிரச்சினை பத்தாதுன்னு இது வேற.. Viral Video..!
Author: Vignesh30 May 2024, 11:55 am
அழகிய நடிகையான நிவேதா பெத்துராஜ் தமிழில் ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படமே சூப்பர் ஹிட் அடிக்க அடுத்தடுத்து ஹிட் கொடுப்பார் என பார்த்தால் தொடர் தோல்வியால் சறுக்கலை சந்தித்து மார்க்கெட் இல்லாமல் போனார்.
மேலும் படிக்க: நயன்தாராவுக்கு கெட்டவுட்.. மூக்குத்தி அம்மன் 2-ம் பாகத்தில் அம்மனாக நடிக்கும் பிரபல நடிகை..!
முன்னதாக தமிழில், என்மனசு தங்கம், டிக் டிக் டிக், பொன் மாணிக்கவேல், திமிரு பிடித்தவன், சங்கத்தமிழன்போன்ற படங்களில் நடித்துள்ளார். நிவேதா பெத்துராஜ். தமிழ் மொழி படங்களை தாண்டி தெலுங்கில் பல முன்ணனி ஹீரோக்கள் படங்களில் நடித்திருக்கிறார்.
இதனால், தெலுங்கு பக்கம் செல்ல அங்கு தொட்டதெல்லாம் ஹிட் அடித்து ராசியான நடிகையாக முத்திரை குத்தப்பட்டார். ஆம், மெண்டல் மதிலோ படம் மூலம் தெலுங்கில் அறிமுகமான நிவேதா பெத்துராஜ் அதன் பிறகு சித்ரலஹரி, அலவைகுந்தபுரமுலு, ரெட் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார். தற்போது தஸ் கா தம்கி என்கிற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார்.
மேலும் படிக்க: இத்துணூண்டு பாட்டில் இத்தனை லட்சமா..தங்க பாட்டிலில் தண்ணீர் குடிக்கும் நீடா அம்பானி..!
இதனிடையே, திடீரென நிவேதா பெத்துராஜின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. போலீஸ் இடம் சிக்கி வாக்குவாதம் நடந்து உள்ளது. இதற்கிடையில், கோபமடையும் நிவேதா பெத்துராஜ் கேமராவை மறைத்துவிடுகிறார். இது உண்மையாகவே நடந்த சம்பவமா இல்லை படத்தின் ப்ரோமோஷனா என சந்தேகத்தை கிளப்பியுள்ளது. ஏனென்றால், இதுபோன்ற ப்ரோமோஷன் யுத்திகளை தற்போது பலரும் கையாண்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கஸ்டடி படத்திற்காக கூட வெங்கட் பிரபு கைது என தெரிவித்து விஷயம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலானது. இறுதியில், அது அப்படத்திற்கான ப்ரோமோஷன் என தெரியவந்தது. அதே போல் இதுவும் இருக்கலாம் என்கின்றனர்.
#News @Nivetha_Tweets pic.twitter.com/hWuwfpvj3N
— devipriya (@sairaaj44) May 30, 2024
சமீபத்தில், கூட நிவேதா பெத்துராஜ் சுற்றிசர்ச்சைகள் எழுந்த நிலையில், அதற்கு தக்க பதிலடி கொடுத்து பதிவு ஒன்றை வெளியிட்ட பின்னர் அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.