TTF வாசன் மீண்டும் கைது.. ஜாமீனில் வெளியே வர முடியாதபடி மேலும் ஒரு வழக்கு..!!
Author: Udayachandran RadhaKrishnan30 May 2024, 11:18 am
பிரபல பைக் ரேசரான TTF வாசன் மீது வழக்கு ஒன்றில் 10ஆண்டுகள் பைக் ஓட்டுவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், தற்போது TTF வாசன் தனது கார் மூலம் ஊர் ஊராக சுற்றி அதனை வீடியோவாக இணையதளத்தில் பதிவு செய்து வருகிறார். இந்த நிலையில் சென்னையில் இருந்து மதுரை வழியாக தூத்துக்குடி செல்லும் பொழுது கடந்த 15ஆம் தேதி இரவு 7.50 மணி அளவில் வண்டியூர் டோல்கேட் பகுதியில் TTF வாசன் ஓட்டி வந்த TN 40 AD 1101 என்ற காரில் அஜாக்கிரதை ஆகவும் கவனக்குறைவாகவும் பொது மக்களுக்கு உயிருக்கு ஆபத்து ஏற்படும் விதமாக செல்போனில் பேசிக் கொண்டே ஓட்டுவது போன்ற காட்சிகள் காரில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகி இருந்தது.
இந்த நிலையில் அந்த காட்சிகளை தனது ட்வின் திராட்ளர் என்ற ID-யின் வழியாக யூடியூப் சேனலில் பதிவிட்டுள்ளார். இதனை மதுரை மாநகர ஆயுதப்படை சார்பு ஆய்வாளரும் சமூக ஊடகப் பிரிவு கண்காணிப்பா அலுவலருமான மணிபாரதி என்பவர் டிடிஎஃப் வாசன் குறித்து அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். தொடர்ந்து அண்ணா நகர் காவல் துறையினர் பைக்ரேஸரான TTF வாசன் மீது 6 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் படிக்க: காந்தி வரலாறு தெரியாதா? பிரதமர் பேசும் பேச்சா? மன்னிப்பு கேளுங்க மோடி.. செல்வப்பெருந்தகை தாக்கு!
வழக்கு பதிவு செய்த அண்ணா நகர் போலீசார் நேற்று இரவு டிடிஎஃப் வாசனை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து, பைக் ஓட்டுவதற்கு 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆபத்தை விளைவிக்கும் வகையில் காரை ஓட்டிய TTF வாசன் மீது 6 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும், ஒரு வழக்காக 308 பிரிவின் கீழ் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது 7 பிரிவின் கீழ் அண்ணா நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து தற்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மருத்துவ பரிசோதனை செய்வதற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். தொடர்ந்து நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்த உள்ளனர்.