நேற்றிரவு திடீரென பயங்கர காட்டுத்தீ.. அரை கிலோ மீட்டருக்கு பற்றி எரிந்த பெரும்பாக்கம் சதுப்பு நிலம்!!!

Author: Babu Lakshmanan
31 May 2024, 9:36 am

சென்னை பெரும்பாக்கம் சதுப்பு நிலத்தில் நேற்றிரவு ஏற்பட்ட பயங்கர விபத்தினால் பெரும் பரபரப்பு நிலவியது.

சென்னை சோழிங்கநல்லூரில் ஆவின் பால் பண்ணையின் பின்புறம் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் ஒரு பகுதியாக பெரும்பாக்கம் சதுப்பு நிலம் உள்ளது. நேற்றிரவு திடீரென்று சதுப்பு நிலத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.

தீயின் தாக்கம் அதிகமாக இருந்ததால் சதுப்பு நிலத்தில் இருந்த கோரைப்புற்கள், செடிகள், மரங்கள் தீயில் கருகின. கடந்த சில நாட்களாக சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், சதுப்பு நிலத்தில் உள்ள கோரைப்புற்கள், செடி, மரங்கள் காய்ந்து போய் இருந்த நிலையில் தீயில் அவை எரிய தொடங்கின.

மேலும் படிக்க: ‘நீ போய் பு***து’… வார்டை தூய்மையாக வைக்கக்கோரிய இளைஞரை தாக்கிய காங்கிரஸ் கவுன்சிலர் ; அதிர்ச்சி வீடியோ!

இது குறித்து தகவல் அறிந்த வனத்துறை மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சதுப்பு நிலம் என்பதால் தீவிபத்து ஏற்பட்ட இடத்துக்கு உடனடியாக அவர்களால் செல்ல முடியாததால் தீயை அணைப்பதில் பிரச்சனை ஏற்பட்டது.

இதற்கிடையே தான் பெரும்பாக்கம் சதுப்பு நிலத்தில் சுமார் அரை கிலோமீட்டர் தொலைவுக்கு தீ பரவி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தீ மேலும் பரவுவதை தடுத்து தீயை அணைக்கும் பணியில் வனத்துறை மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி
  • Close menu