பிகினி ஆடையில் அருவியில் குளியல்… லீக்கான வீடியோ ; பதறிப் போன ராஷ்மிகா மந்தனா..!!!

Author: Babu Lakshmanan
31 May 2024, 11:37 am

கடந்த சில நாட்களாக நடிகைகளின் DEEP FAKE வீடியோ வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ராஷ்மிகா வீடியோ வெளியாகியது பிரதமர் வரை கொந்தளிக்க செய்தது. ராஷ்மிகாவை தொடர்ந்து நடிகை கத்ரீனா கைஃப் டைகர் 3 படத்தில் நடித்த காட்சியை டீப் ஃபேக் டெக்னாலஜி மூலம் ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டனர்.

இப்படி நடிகைகளின் டீப் ஃபேக் வீடியோக்கள் வெளியாவது தொடர்கதையாக உள்ள நிலையில், தற்போது புதிதாக பாலிவுட் நடிகை ஆலியா பட்டின் டீப் ஃபேக் வீடியோ ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

மேலும் படிக்க: அணையப் போகும் விளக்கு பிரகாசமகத்தான் எரியும்… ஜெயக்குமாருக்கு அண்ணாமலை பதிலடி!!!

அந்த வீடியோவில் நடிகை ஆலியா பட் படுக்கையறையில் இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்று இருந்தன. இது DEEP FAKE வீடியோ என தெரியாமல் சிலர் உண்மை என நினைத்து பகிரத்தொடங்கியதால், இந்த வீடியோ வைரலானது. இப்படி நடிகைகளின் DEEP FAKE வீடியோக்கள் தொடர்ந்து பரவி வருவதால் அது பெரும் தலைவலியாக மாறி இருக்கிறது.

இந்த நிலையில் மீண்டும் ராஷ்மிகாவின் டீப் பேக் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் ராஷ்மிகா சிவப்பு நிற நீச்சல் உடை அணிந்து ஒரு நீர் வீழ்ச்சியின் கீழே நின்று இருப்பது போன்ற காட்சி உள்ளது.

இந்த வீடியோவை உண்மை என்று நம்பி பலர் கருத்துக்களை பதிவிட்டு வரும் நிலையில், இது போலி வீடியோ என்று தெரிய வந்தது. கொலம்பியன் மாடல் அழகி டேனியேலா வில்லாரியலின் முகத்தை நீக்கிவிட்டு ராஷ்மிகாவின் முகத்தை டீப் பேக் தொழில் நுட்பம் மூலம் இணைத்து வெளியிட்டுள்ளனர். இது சினிமா வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?