TTF போல் கைதாவாரா VJ சித்து?.. வீடியோவில் பேசிய ஆபாச வார்த்தையால் வந்த ஆப்பு.. பரபரப்பு புகார்..!

Author: Vignesh
31 May 2024, 6:16 pm

பைக் ரேஸரான TTF வாசனுக்கு வழக்கு ஒன்றில் 10ஆண்டுகள் பைக் ஓட்டுவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில் TTF வாசன் தனது கார் மூலமாக ஊர் ஊராக சுற்றிவருகிறார். அதனை கார் ஓட்டியபடி வீடியோவாக பதிவுசெய்துவருகிறார்.

முன்னதாக, TTF வாசனின் பைக் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது கார் ஓட்டையும் அவர் கைதாகி ஜாமினில் வெளியே வந்து உள்ளார். இது தொடர்பாக, பலரும் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

vj siddhu

மேலும் படிக்க: ஜெயிக்க போறது நாங்கதான்.. ‘இந்தியா கூட்டணி’ அமோக வெற்றி பெறும் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உறுதி..!

இந்நிலையில், விஜே சித்து மீது கவனம் திரும்பியுள்ளது. அதாவது, விஜே சித்து என்ற youtube தளத்தில் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார். அதேபோல, அவரின் மொட்டை மாடி என்ற வீடியோக்களும் முக்கிய பட ப்ரமோஷன்களும் நிகழ்ச்சியாகவே மாறி உள்ளது. இந்த விவகாரத்தில் விஜே சித்து சிக்க முக்கிய காரணம் விலாக் வீடியோ ஒன்றில் சித்து போன் பேசிக் கொண்டே ஓட்டுகிறார்.

vj siddhu

இதேபோல் செய்தததால் தான் TTF தற்போது, கைது செய்யப்பட்டார் என்பதால், தற்போது சிலர் சமூக வலைதளங்களில் சட்டம் அனைவருக்கும் சமம் அப்படி என்பதால் இருவரும் கைது செய்யப்பட வேண்டும் அல்லவா என்று கேள்விகளை எழுப்பி வந்தனர். இந்நிலையில், யூடியூபர் VJ சித்துவுக்கு எதிராக சென்னை போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

மேலும் படிக்க: தனியாக செல்லும் பெண்கள் தான் டார்கெட்.. YouTube-ஐ பார்த்து செயின் பறிப்பில் ஈடுபட்ட என்ஜினியர்..!

அதாவது, VJ சித்துபோக்குவரத்து விதிகளை மதிக்காமலும் அஜாக்கிரதையாகவும், செல்போனில் பேசியபடி வாகனத்தை இயக்கியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், “சம்பந்தப்பட்ட வீடியோ யூடியூப்பில் வெளியிட்ட நிலையில், அதனை பார்த்து மாணவர்கள், இளைஞர்கள் தவறான வழியில் செல்ல வழிவகுக்கும்” என கூறியும், அந்த “வீடியோவில் ஆபாச வார்த்தைகள், இரட்டை அர்த்த வசனங்கள் இடம் பெற்றுள்ளதாகவும் புகார்” எழுந்து உள்ளது. மேலும், “போக்குவரத்து விதிகளை மீறிய VJ சித்து மீது தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என்று சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த ஷெரின் என்பவர் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Good Bad Ugly Full Movie Leaked on Net in HD Print இணையத்தில் வெளியானது GOOD BAD UGLY… அதுவும் HD PRINT : பரபரப்பில் படக்குழு!