செல்போனுக்கு சம்மன்.. TTF வாசனுக்கு வந்த சோதனை : நீதிமன்றத்தில் ஒப்படைக்க முடிவு!

Author: Udayachandran RadhaKrishnan
1 June 2024, 1:17 pm

சாலை போக்குவரத்து விதிகளை மீறியதாக TTF வாசன் மீது ஏழு பிரிவின் கீழ் மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது

இவ்வழக்கில் ஜாமீன் வழங்கிய மதுரை மாவட்ட நீதிமன்றம் 10 நாட்களுக்கு மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்தில் கையில் தேட வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது

அதன்படி இரண்டாம் நாளான இன்று மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் வழக்கறிஞர்களுடன் வந்த TTF வாசன் கையெழுத்திட்டார்

மேலும் படிக்க: குமரியில் 14 கேமராக்களுடன் பிரதமர் மோடி தியானம் செய்வது ஏன்? செல்வப்பெருந்தகை சந்தேகம்!!

TTF வாசன் வழக்கறிஞர் ஐய்யப்ப ராஜா தகவல், வழக்கு விசாரணைக்காக TTF வாசனின் செல்போனை திங்கள் கிழமை (ஜீன் 3 ஆம் தேதி) மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கிறோம். 3 நாட்களுக்குள் TTF வாசனின் செல்போனை ஒப்படைக்க மதுரை அண்ணா நகர் காவல் நிலையம் சம்மன் வழங்கியுள்ளது

சம்மனை ஏற்றுக்கொண்டு திங்கள் கிழமை செல்போனை காவல் நிலையத்தில் ஒப்படைக்க உள்ளோம்

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 276

    0

    0