இரவோடு இரவாக சுங்கச்சாவடி கட்டணம் திடீர் உயர்வு.. தேர்தல் முடிந்ததும் அதிகரிப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
2 June 2024, 12:36 pm

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கல்லக்குடியில் உள்ள சுங்கச்சாவடி உள்பட நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் வருகின்ற ஜூன் 3-ம் தேதி நள்ளிரவு முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்படுவதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கல்லக்குடி உள்பட 5 சுங்கச்சவாடிகளில் கட்டணம் மாற்றி அமைக்கப்படும் என தகவல் வெளியானது.

பின்னர் மார்ச் 30 ஆம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானதை அடுத்து சுங்கச்சாவடி கட்டண மாற்றம் இரண்டு மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், நாடு முழுவதும் ஜூன் 1ம் தேதி நேற்று மக்களவை தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குபதிவு முடிவடைந்தது.

இதனையடுத்து ஜூன் 3ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் சுங்கச்சாவடி கட்டணம் மாற்றம் அமலுக்கு வருகிறது.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?