எல்லை மீறி ஓடி வந்து பாய்ந்த ரசிகர்கள்.. கதிகலங்கி பயத்தில் நின்ற நடிகை மதுமிதா பைஜு..!(Video)

Author: Vignesh
3 June 2024, 11:28 am

சூர்யா எப்படி வணங்கான் படத்தில் இருந்து விலகினாரோ, அதே போல் இப்படத்தில் கதாநாயகியாக நடித்து வந்த பிரபல மலையாள நடிகை மமிதா பைஜூவும் வணங்கான் படத்திலிருந்து விலகினார். படப்பிடிப்பில் இயக்குனர் பாலா நடிகை மமிதா பைஜூவை அடித்ததாகவும், ஒரு காட்சியில் மூன்று முறைமேல் நடித்தாராம் மமிதா பைஜூவை, அந்த காட்சி அவருக்கு சரியாக புரியவில்லை, ஆகையால் மூன்று டேக் ஆகியுள்ளது. அப்போது, இயக்குனர் பாலா நடிகை மமிதா பைஜூவின் தோள்பட்டையில் அடித்ததாக, இந்த தகவலை நடிகை மமிதா பைஜூ சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வந்தது.

இந்நிலையில், நடிகை மமிதா பைஜூ சர்ச்சை பற்றி விளக்கம் கொடுத்திருக்கிறார். அதில், பாலாவுடன் ஒரு வருடமாக பயணித்திருக்கிறேன். அதுவும், அவரது டீம் நன்றாக தான் பார்த்துக் கொண்டார்கள். நான் பேட்டியில், சொன்ன ஒரு பகுதியை மட்டும் வெட்டி சர்ச்சையாகி இருக்கிறார்கள். பாலா சார் ஷூட்டிங்கில் ஸ்ட்ரிக்ட்தான் அது அவரது ஒர்க்கிங் ஸ்டைல் எனக் கூறி இருக்கிறார். மேலும், பாலாசார் என்னிடம் மிகவும் கடுமையாக எல்லாம் நடந்து கொள்ளவில்லை எனவும், அவர் தற்போது விளக்கம் கொடுத்து பதிவு ஒன்றை அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளதாக தெரிவித்து இருந்தார்.

மேலும் படிக்க: மேலும் படிக்க: ஒதுங்கிய சூர்யா, இறங்கிய கவின்.. 18 வருடங்களுக்குப் பிறகு வரப்போகும் 2-ம் பாகம்..!

மலையாளத்தில் கனவு கன்னியாக வளம் வந்த மதுமிதா பைஜு ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த ரெபெல் படத்தின் மூலமாக தமிழில் நடிகையாக அறிமுகமானார். இது தொடர்ந்து, விஷ்ணு விஷால் பிரதீப் ரங்கநாதன் இணைந்து தற்போது, நடித்து வருகிறார். நேற்று சென்னை வந்த மதுமிதா பைஜு பிரபலமான ஒன்றில் கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டார். அங்கு நடிகை மதுமிதா பைஜுவை பார்க்க அங்கு ஏராளமான ரசிகர்கள் திரண்டு இருந்தனர். இதனால், அங்கு நெரிசல் ஏற்பட்டு நடிகை மதுமிதா பைஜு அந்த கூட்டத்தில் சிக்கி உள்ளார். அந்த வீடியோ தற்போது, சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்