ஒரே படத்தால் உயர்ந்த சம்பளம்.. வில்லனாக நடிக்கும் மாஸ் ஹீரோ.. உங்க காட்டுல இனி மழைதான்!
Author: Vignesh3 June 2024, 7:27 pm
சினிமாவை பொருத்தவரை முன்பெல்லாம் ஹீரோதான் மக்களிடம் அதிகம் போய் சேருவார்கள். அவர்களுக்கு தான் அதிக சம்பளமும் கிடைக்கும் என்ற நிலையில் இருந்தது. ஆனால், இப்போது அப்படி இல்லை நாயகனுக்கு இணையாக வில்லன் கதாபாத்திரமும் அமைய அவர்களுக்கும் மக்களிடையே நல்ல வரவேற்பு ஏற்பட்டு வருகிறது.
மேலும் படிக்க: ராதிகாவுக்காக கோவிலில் அங்கப்பிரதட்சணம் செய்த சரத்குமார்.. வேண்டுதல் பலிக்குமா?..
ஆனால், தற்போது பாலிவுட் சினிமாவில் ரன்பீர் கபூர் நடிக்க ஒரு மிகப்பெரிய படம் தயாராகி வருகிறது. அப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் பற்றியும் அவருக்கு கொடுக்கப்படும் சம்பளம் பற்றி தான் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க: கேஜிஎப் பட நடிகைக்கு செம அடி.. சுற்றி வளைத்த பொதுமக்கள் சத்தம் போட்டு அலறிய வீடியோ வைரல்..!
அதாவது, நிதேஷ் திவாரி இயக்கத்தில் ராமாயணம் படம் தயாராகி வருகிறது. இதில், ரன்வீர் கபூர் மற்றும் சாய்பல்லவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்கள். இந்த படத்தில், ராவணன் கதாபாத்திரத்தில் KGF பட நடிகர் யாஷ் ராவணனாக நடிக்கிறாராம். இந்த வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த யாஷ் க்கு ரூபாய் 200 கோடி சம்பளம் கொடுக்கப்பட இருப்பதாகவும், இதன் மூலம் வில்லன் வேடத்திற்கு அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இவர் வளர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.