கோவை மண்டலத்தின் கிங் யார்? பிறந்தநாளில் அண்ணாமலைக்கு பரிசு கிடைக்குமா? எகிறும் எதிர்பார்ப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
4 June 2024, 8:20 am

கோவை மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணிக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் அரசு தொழில் நுட்ப கல்லூரி வளாகத்தில் தயார் நிலையில் உள்ளன.

கோவை மக்களவை தொகுதிக்கு 123 வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பாளர்களும் 123 வாக்கு எண்ணிக்கை உதவியாளர்களும் 127 நுண் பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் கோவை மக்களவைத் தொகுதிக்கு வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும் 2,500 க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை பணிகள் இன்று நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பார்வையாளர்களாக தேர்தல் ஆணையத்தால் அனுராக் சவுத்ரி மற்றும் நிதீஷ் குமார் தாஸ் எனும் இரண்டு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இன்று நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கையில், முதலில் காலை 8 மணிக்கு தபால் வாக்கு எண்ணும் பணிகளும், அதைத் தொடர்ந்து 8.30 மணிக்கு மேல் வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகளும் நடைபெற உள்ளன. இதற்காக வாக்கு எண்ணும் மையங்களில் நான்கு அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில் மத்திய பாதுகாப்புப் படையினர், தமிழக காவல் துறையினர், தேர்தல் அலுவலர்கள் என மொத்தம் 105 அலுவலர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜி.சி.டி கல்லூரியைச் சுற்றி 100 மீட்டர் சுற்று அளவிற்கு பொதுமக்கள் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கு வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்தில் போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கும், தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. மேலும், வாக்கு எண்ணும் மையத்தில் போதிய அத்தியாவசிய வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை பணிகளைக் கண்காணிக்கும் வகையில் 360 டிகிரியில் கேமராக்களும், சி.சி.டி.வி கேமராக்களும் பொருத்தப்பட்டு உள்ளன.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…