இதெல்லாம் விதி மீறல்.. தடுத்து நிறுத்தப்பட்ட மன்சூர் அலிகான்; வாக்கு எண்ணும் மையத்தில் சலசலப்பு..!
Author: Vignesh4 June 2024, 9:03 am
வேலூர் மக்களவைத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தந்தை பெரியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. வேலூரில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான் அவர்கள் பலாபழம் சின்னத்தில் போட்டியிட்டார்.
இந்நிலையில், இன்று வாக்கு என்னும் மையத்திற்கு வருகை தந்த அவர் செல்போன் எடுத்து வந்த காரணத்தால் நுழைவு வாயிலேயே தடுத்து நிறுத்தப்பட்டார். பின்னர், செல்போன் அவரது உரிமையாளரிடம் கொடுத்து விட்ட பின்னர் வாக்கு எனும் மையத்திற்கு அவர் அனுமதிக்கப்பட்டார். இதனால் சிறிது நேரம் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
மேலும், வேலூர் மக்களவைத் தொகுதியில் தபால் வாக்குகள் வைக்கப்பட்டுள்ள பெட்டி திறக்கப்பட்டு தபால் வாக்குகள் பிரிக்கும் பணி துவங்கியது. வேலூர் மக்களவைத் தொகுதியில் 7,362 தபால் வாக்குகளும் 3012 மின்னணு தபால் வாக்குகள் சேர்த்து மொத்தம் 10 ஆயிர த்து 374 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளது.