ஆரம்பமே அசத்தலா இருக்கே.. தூத்துக்குடியை கைப்பற்றுமா திமுக? தபால் வாக்குகளில் முந்தும் கனிமொழி..!

Author: Vignesh
4 ஜூன் 2024, 9:42 காலை
Kanimozhi - UPdatenews360
Quick Share

மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்ற முடிந்து. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. மக்கள் அளித்துள்ள தீர்ப்பை இன்று காலை 8 மணி முதல் வாசிக்க தொடங்குகிறது தேர்தல் ஆணையம். 543 மக்களவைத் தொகுதிகளில் எந்த கட்சி எத்தனை தொகுதிகளை கைப்பற்ற போகிறது யாருக்கு பெரும்பான்மை கிடைக்கப் போகிறது என்று எதிர்பார்ப்பு அனைவரிடமும் எழுந்து வருகிறது.

இந்நிலையில், தேர்தலுக்கு முந்தைய பிந்தைய கருத்துக் கணிப்புகளை பொறுத்த வரை பாஜக கூட்டணியை அதிக இடங்களை கைப்பற்றும் என பல நிறுவனங்கள் தெரிவித்தனர். தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி தான் பெரும்பான்மை இடங்களை பெறும் என்றும், ஓரிரு தொகுதிகள் அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் செல்லலாம் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் திமுக கூட்டணி உறுதியாக வெற்றி பெறும் என்று குறிப்பிடும் பல தொகுதிகளில் ஒன்று தூத்துக்குடி. முன்னதாக, தூத்துக்குடி களத்தில் நான்குமுனை போட்டி நிலவி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. தூத்துக்குடி தொகுதியில் முதலில் தபால் வாக்குகள் எண்ணிக்கை நடைபெறும் நிலையில் கனிமொழி முன்னிலை பெற்றுள்ளார்.

  • Vanathi தமிழிசை மீது தரம்தாழ்ந்த விமர்சனம்.. திருமா மன்னிப்பு கேட்கணும் : வானதி சீனிவாசன் DEMAND!
  • Views: - 394

    0

    0