4 லட்சம் வாக்குகள் லீடு.. ரேபரேலி மற்றும் வயநாடு தொகுதியில் கெத்து காட்டிய ராகுல் காந்தி..!
Author: Vignesh4 June 2024, 4:59 pm
மக்களவைத் தேர்தலில் ரேபரேலி மற்றும் வயநாடு என இரு தொகுதிகளிலும் போட்டியிட்ட ராகுல் காந்தி மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். கேரளாவின் வயநாடு தொகுதி ராகுல் காந்தி 3 லட்சத்து 24 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார். அவர் 5,85,000 வாக்குகள் பெற்ற நிலையில், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சிபிஐ வேட்பாளர் ஏஜி ராஜா 2 லட்சத்து 61 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் கே சுரேந்திரன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
இதேபோல, உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும், கேரளாவின் வயநாட்டில் 3,50,030 வாக்குகள் வித்தியாசத்திலும் முன்னிலையில் உள்ளார். ஏறக்குறைய ராகுல் காந்தியின் வெற்றி உறுதியாகிவிட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியினர் உற்சாகத்தில் உள்ளனர். இது கட்சி தொண்டர்களிடையே மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.