தாயை பிரிந்து தவிக்கும் குட்டி யானை.. மீண்டும் தாயுடன் சேர்க்கும் பணியில் வனத்துறை தீவிரம்..!

Author: Vignesh
5 June 2024, 1:20 pm

கோவை அருகே தாயை பிரிந்த குட்டி யானையை தாயுடன் சேர்க்கும் முயற்சியில் வனத்துறை தீவிரம் காட்டி வருகிறது.

கோவை மாவட்டம் குப்பேபாளையம் பகுதியில் தனியார் பாக்குத்தோப்பில் இருந்த குட்டியானையை தாயுடன் சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் படிக்க: கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனீங்க.. செல்போனை போலீஸில் ஒப்படைத்த TTF வாசன்..!

மருதமலை வனப்பகுதியில் உடல்நலம் பாதிக்கப்பட்ட தாயை பிரிந்து கூட்டத்துடன் சுற்றி வந்த 3 மாத குட்டி யானையை வனத்துறையின் கண்காணித்து வந்த நிலையில் நேற்று இரவு முழுவதும் கூட்டத்துடன் இருந்த நிலையில் அடையாளம் கண்ட வனத்துறையினர் அதனை பிடித்து தாய் யானையிடன் சேர்க்க முயற்சி செய்து வருகின்றனர். அருகிலேயே தாய் யானை உள்ளதால் அதனுடன் சேர்க்கும் பணியில் வனத்துறை தீவிரம் காட்டி வருகிறது.

  • Good Bad Ugly Hit of Flop குட் பேட் அக்லி படம் ஹிட்டா? இல்லையா? இன்னும் எவ்வளவு கோடி வசூல் செய்யணும்?