தேர்தல் விதிமுறைகள் இன்னும் நடைமுறையில் இருக்கா? முடிவுக்கு வரும் விதிகள்.. நேரத்துடன் வெளியான அறிவிப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
6 June 2024, 11:39 am

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் துவங்கியது. ஜூன் 4 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் அனைத்தும் வெளியானது. இதற்கிடையில் மட்டுமல்லாது, தேர்தல் தேதி அறிவித்தது முதல் இன்று வரை தேர்தல் விதிகள் தமிழகத்தில் அமலில் இருக்கிறது.

இந்த தேர்தல் விதிகள் எப்போது நிறைவடையும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த சூழலில், இதுகுறித்து நேற்று தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு நேற்று அளித்த பேட்டியில், ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுது உட்பட பல்வேறு புகார்கள் அரசியல் கட்சிகளிடம் இருந்து வந்தன.

தமிழகத்தில் ஓட்டு எண்ணிக்கை அமைதியாக முடிந்தது. தலைமை தேர்தல் கமிஷனர், தேர்தல் முடிவுகளை குடியரசு தலைவரிடம் வழங்குவார். அதன்பின், மத்தியில் புதிய ஆட்சி அமைக்க நடவடிக்கை துவங்கும்.

தேர்தல் நடத்தை விதிகள், நாளை (ஜூன் 6) வரை அமலில் இருக்கும் என சத்யபிரதா சாஹு தெரிவித்தார். அதன்படி இன்று நள்ளிரவு 12 மணிவரையில் தேர்தல் நடத்தை விதிகள் தமிழகத்தில் அமலில் இருக்கும்.

  • what is the problem on sikandar salman khan asks people படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!