சின்ன பையனை பெரிய மனசு பண்ணி ஜெயிக்க வைத்திருக்கலாம் : திமுக சூழ்ச்சி.. விஜயபிரபாகரன் தோல்வி.. பிரேமலதா ஆவேசம்!

Author: Udayachandran RadhaKrishnan
6 June 2024, 1:43 pm

தமிழகத்தில் அதிமுக கூட்டணி ஆதரவுடன் விருதுநகர் தொகுதியில் தேமுதிக வேட்பாளராக விஜயகாந்த் மகன் விஜயப்ரபாகரன் போட்டியிட்டார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரிடம் சுமார் 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டார்.

தேர்தல் முடிவில், காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 3,85,256 வாக்குகள் பெற்றார். தே.மு.தி.க வேட்பாளர் விஜயபிரபாகரன் 3,80,877 வாக்குகள் பெற்று இருந்தார்.

இந்த நிலையில் தான் , வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடைபெற்றதாக தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் இன்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். அவர் கூறுகையில், விருதுநகரில் விஜயபிரபாகரன் தோற்கடிக்கப்படவில்லை. அவர் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க: நட்டாவை பதவியில் இருந்து தூக்க முடிவு… பாஜக தேசிய தலைவராகிறார் சிவராஜ் சிங்? இதுதான் காரணம்!

தனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக தேர்தல் நடத்தும் மாவட்ட ஆட்சியரே கூறினார். வாக்கு எண்ணிகையில் 13வது சுற்றில் இருந்து முறைகேடு ஏற்பட்டுள்ளது.
3 மணி முதல் 5 மணி வரையில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது என்றும் குற்றம் சாட்டினார். மேலும் விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என கூறி தேர்தல் ஆணையத்தில் தேமுதிக சார்பில் மனு அளிக்கப்பட உள்ளதாகவும் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 261

    0

    0