சவால் விட்ட பாமக பிரமுகர் எங்கே? அண்ணாச்சியை கண்டா வரச் சொல்லுங்க.. திமுகவினரின் வீடியோ வைரல்!
Author: Udayachandran RadhaKrishnan6 June 2024, 2:41 pm
தருமபுரி நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் வேட்பாளராக வழக்கறிஞர் ஆ.மணியும் பாமக சார்பில் சௌமியா அன்புமணியும் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் திமுக வேட்பாளர் மணி 432667, வாக்குகள் பெற்றார் பாமக சௌமியா அன்புமணி 411367 வாக்குகள் பெற்றிருந்த நிலையில் திமுக வேட்பாளர் மணி 21300 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் வாக்கு எண்ணிக்கையின் போது பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த பாமக கட்சியைச் சேர்ந்த ஒரு நிர்வாகியும் திமுக கட்சியைச் சேர்ந்த ஒரு நிர்வாகியும் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது .
மேலும் படிக்க: பாஜக ஆட்சி நீடிக்காது… INDIA கூட்டணி ஆட்சிக்கு வரும் : அடித்து சொல்லும் திருமாவளவன்!
அதில் இந்த தேர்தலில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி தேர்தலில் தோற்றால் நான் டவர் மேல் இல்லையெனில் உயரமான மலையின் மேலே இருந்து தலைகீழாக குதிப்பேன் என பாமக துண்டை அணிந்த ஒருவரும் திமுக வேட்பாளர் மணி எம்பி ஆகவில்லை எனில் தான் சாவதாகவும் திமுக காரன் என்றும் பொய் பேச மாட்டான் எனவும் இப்பவே ஒரு மாலை வாங்கி வந்து வைங்க நம்ம இருவருக்கும் உயிர் தான் பந்தயம் என இருவரும் பேசும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சௌமியா தோத்துட்டாங்க.. பாமக பிரமுகர் எங்கே?#viralpost | #viralvideo | #viralreels | #viralshorts | #shortsviral | #trendingvideos | #viralnews | #viral | #video | #sowmiaanbumani | #dharmapuri | #stalin | #dmk | #pmk | #anbumaniramadoss | #dmknews pic.twitter.com/NSBryV9MTF
— UpdateNews360Tamil (@updatenewstamil) June 6, 2024
அதோடு மட்டும் இல்லாமல் தற்போது சௌமியா அன்புமணி தேர்தலில் தோல்வியை தழுவியதால் இன்று இந்த வீடியோவை பதிவிட்டு இந்த வீடியோவில் பேசிய அண்ணாச்சி எங்கே அவரை பார்த்தா கொஞ்சம் கண்டா வர சொல்லுங்க என திமுகவினர் இந்த வீடியோவை வைரல் ஆக்கி வருகின்றன.