சீவலப்பேரி பாண்டி… ஆயுதங்களுடன் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட்ட இளைஞர் : தட்டித் தூக்கிய போலீஸ்!

Author: Udayachandran RadhaKrishnan
7 June 2024, 5:58 pm

தென்காசி மாவட்டத்தில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் சமூக அக்கறையுடனும், பொறுப்புணர்வுடனும், சட்டம் குறித்த எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும்.

வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவேற்றம் தொடர்பாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் போலீசார் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆய்வு செய்யும் பணியை தொடங்கினர்.

இதில் ஆயுதங்களுடன் மிரட்டும் வகையில் வீடியோ யாராவது வெளியிட்டு உள்ளனரா என கண்காணித்து வந்தனர். இந்நிலையில் நேற்றைய தினம் அச்சன்புதூர் மணக்காடு தெருவை சேர்ந்த முருகேசன் மகன் சதீஷ் (20) என்ற வாலிபர் ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்டது தெரிய வந்தது.

மேலும் படிக்க: கூடுகிறது தமிழக சட்டப்பேரவை… முக்கிய அறிவிப்புகள் வெளியாகிறது : சபாநாயகர் தகவல்!

இது குறித்து அச்சன்புதூர் இன்ஸ்பெக்டர் ஹரிஹரன் இன்ஸ்டாகிராமில் ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்ட சதீஷ் மீது ஆயுத தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்ந்து அச்சன்புதூர் பகுதியில் இளைஞர்கள் ஆயுதங்களுடன் இன்சாட் கிராமில் வீடியோ வெளியிடுவதை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 487

    0

    0