ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் பழிக்கு பழி? ஒய்.எஸ்.ஆர் கட்சியினர் மீது தெலுங்கு தேசம் தாக்குதல்!

Author: Udayachandran RadhaKrishnan
7 June 2024, 7:52 pm

ஆந்திர மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் முன்னாள் அமைச்சர் கோடாலி நானி, முன்னாள் எம்.எல்.ஏ. வல்லபனேனி வம்சி ஆகியோர் வீட்டிற்கு தெலுங்கு தேச கட்சியினர் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்த முயன்றனர்.

போலீசார் தடுத்து நிறுத்தினர் பின்னர் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் சின்னம் பேனை கயிறு கட்டி தறையில் இழுத்து சென்றனர். ராஜமுந்திரி மோரம்பூடி மேம்பாலத்தை பார்வையிட தெலுங்கு தேசம் கட்சியின் நகர எம்எல்ஏ ஆதிரெட்டி வாசு சென்றபோது கடந்த ஆட்சியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி.யாக இருந்து தற்போது நடந்த தேர்தலில் ராஜமுந்திரி எம்.எல்.ஏ.வாக நின்று தேல்வியடைந்த பாரத் பெயர் எழுதப்பட்ட இருந்ததால் மோரம்பூடி மேம்பாலம் கல்வெட்டு பலகையை தெலுங்கு தேசம் கட்சியினர் அடித்து உடைத்தனர்.

அவர்களை தடுத்து நிறுத்திய போலீசாருடன் வாக்குவாதம் நடந்தது.
தெலுங்கு தேசம் கட்சியினரின் கிளர்ச்சியால் போலீசார் அமைதியாக நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

அனந்தபுரம் ஸ்ரீகிருஷ்ண தேவராய பல்கலைக்கழகத்தில் ஆறு மாதங்களுக்கு முன்பு ஒய்.எஸ்.ஆர். சிலை பல்கலைகழக ஆட்சிமன்றத்தின் அனுமதியின்றி சிலை நிறுவப்பட்டதாக கூறி மாணவர் சங்கத்தினர் போராட்டம் நடத்தி வந்த நிலையில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சிக்கு வந்துள்ளதால் ஒய்.எஸ்.ஆர். சிலையை அதிகாரிகள் அகற்றினர்.

திருப்பதி மாவட்டம் பெதலக்குரு மண்டலம் சில்லகுரு கிராமத்தில் துவ்வூர் விஜய் சேனா ரெட்டி தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் தெலுங்கு தேச கட்சி தலைவர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி கொண்டிருந்த போது, ​​ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த காமிரெட்டி சத்யநாராயண ரெட்டியின் ஆதரவாளர்கள் விஜய் சேனா ரெட்டி மீது தாக்குதல் நடத்தினர்.

இதில் காயமடைந்தவர்கள் நாயுடுபேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அங்கு பதற்றமான சூழல் உருவாகி உள்ளது.

மேலும் படிக்க: ஆட்சியமைக்க அழைத்த குடியரசுத் தலைவர்.. 3வது முறையாக பிரதமராக பதவியேற்கும் மோடி!!

இதேபோன்று மாநிலத்தில் ஐந்து ஆண்டுகளாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் ஆட்சியில் பல இன்னல்களை சந்தித்தவர்கள் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் பழிக்கு பழிவாங்கி வருகின்றனர். இதனால் பல இடங்களில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் யாருக்கும் தெரியாமல் தலைமறைவாக வெளி ஊர்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 284

    0

    0